MAP

திருத்தந்தையின் உடல் நிலை சீராக உள்ளது

மார்ச் 2, ஞாயிற்றுக்கிழமை காலை மருத்துவமனையில் தன்னைக் கவனித்துக்கொள்பவர்களுடன் திருப்பலியில் பங்கேற்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், செபத்திலும் ஓய்வெடுத்தலிலும் இந்நாளை செலவழித்தார்.

மெரினா ராஜ் - வத்திக்கான்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் உடல் நிலை சீராக இருப்பதாகவும், செயற்கை சுவாசம் வழங்கும் சிகிச்சை முறைக்கு அவசியம் இல்லாதிருப்பதாகவும் திருப்பீடத் தகவல் தொடர்புத்துறை தெரிவித்துள்ளது.

மார்ச் 2, ஞாயிற்றுக்கிழமை மாலை வெளியிட்டுள்ள தகவல்களில் இவ்வாறு குறிப்பிட்டுள்ள திருப்பீடத் தகவல் தொடர்பகமானது மார்ச் 3, திங்கள் கிழமை காலை வெளியிட்டுள்ள செய்தியில் அவர் கடந்த (மார்ச் 2) இரவு முழுவதும் நன்றாக உறங்கி ஓய்வெடுத்ததாகவும் தெரிவித்துள்ளது.

மூச்சுக்குழாய் அழற்சி இருப்பதாகவும், ஆக்ஸிஜன் தொடர்புடைய சிகிச்சை மட்டும் அதிக அளவில் திருத்தந்தைக்குக் கொடுக்கப்பட்டு வருவதாகவும் திருப்பீடத்தகவல் தொடர்பகம் எடுத்துரைத்துள்ளது. 

மருத்துவப் பரிசோதனை முடிவுகளின் சிக்கலான தன்மையைக் கருத்தில் கொண்டு திருத்தந்தையின் உடல்நிலை மருத்துவக் கணிப்புகளுடன் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றது.

மார்ச் 2, ஞாயிற்றுக்கிழமை

ஞாயிற்றுக்கிழமை காலை மருத்துவமனையில் தன்னைக் கவனித்துக்கொள்பவர்களுடன் திருப்பலியில் பங்கேற்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், செபத்திலும் ஓய்வெடுத்தலிலும் இந்நாளை செலவழித்தார். 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

03 மார்ச் 2025, 10:20