MAP

திருத்தந்தைக்காக இறைவேண்டல் செய்யும் விசுவாசி திருத்தந்தைக்காக இறைவேண்டல் செய்யும் விசுவாசி   (ANSA)

திருத்தந்தையின் உடல்நிலை சீராக உள்ளது

மார்ச் 04, செவ்வாய்க்கிழமை இரவு திருத்தந்தை நன்றாக உறங்கி ஓய்வெடுத்தார் என்றும், மார்ச் 05, புதன்கிழமை காலை 8 மணிக்குப் பிறகு படுக்கையிலிருந்து எழுந்தார் என்றும் அறிவித்துள்ளது திருப்பீடகச் செய்தித் தொடர்பகம்.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

மார்ச் 4, இச்செவ்வாய்க்கிழமையன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு சுவாசக் கோளாறு பிரச்சனை எதுவும் ஏற்படவில்லை என்று திருப்பீடச் செய்தித் தொடர்பகம் தெரிவித்துள்ளது.

அவர் தொடர்ந்து மூச்சு விடுவதில் சிறிது சிரமத்தை மேற்கொண்டார் எனவும், தனது உடல்நிலைக் குறித்து எப்போதும் விழிப்புடன் இருக்கிறார் எனவும் கூறும் அவ்வறிக்கை, அவருக்கு அளிக்கப்படும் மருத்துவச் சிகிச்சைகளுக்குத் தொடர்ந்து ஒத்துழைப்புக் கொடுத்து வருகிறார் என்றும் உரைக்கிறது.

மேலும் செயற்கையாக ஆக்சிஜன் வழங்கும் சிகிச்சைமுறை மீண்டும் அவருக்கு வழங்கப்பட்டது என்றும், அவர் உடல்நிலை தொடர்ந்து மருத்துவக் குழுவால் கண்காணிக்கப்பட்டு வருகிறது எனவும் தெரிவிக்கிறது அதன் அறிக்கை.

மார்ச் 4, செவ்வாய்க்கிழமை முழுவதும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் நன்றாக ஓய்வெடுத்தார் என்றும், திருநற்கருணைப் பெற்று இறைவேண்டலில் ஈடுபட்டார் என்றும் மேலும் உரைக்கிறது திருப்பீடச் செய்தித் தொடர்பகம்..

மார்ச் 05, புதன்கிழமை

மார்ச் 04, செவ்வாய்க்கிழமை இரவு திருத்தந்தை நன்றாக உறங்கி ஓய்வெடுத்தார் என்றும், மார்ச் 05, புதன்கிழமை காலை 8 மணிக்குப் படுக்கையிலிருந்து எழுந்தார் என்றும் அறிவித்துள்ளது திருப்பீடச் செய்தித் தொடர்பகம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

05 மார்ச் 2025, 10:42