MAP

உரோம் ஜெமெல்லி மருத்துவமனை உரோம் ஜெமெல்லி மருத்துவமனை   (ANSA)

திருத்தந்தையின் பொதுச் சந்திப்புக்கள் ஞாயிறு வரை இரத்து

பிப்ரவரி 23, ஞாயிற்றுக்கிழமை வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவிலில் உரோம் உள்ளூர் நேரம் காலை 9 மணியளவில் நடைபெற உள்ள திருப்பலிக்குத் திருத்தந்தைக்குப் பதிலாக பேராயர் ரீனோ பிசிகெல்லா அவர்கள் தலைமையேற்க உள்ளார்.

மெரினா ராஜ் - வத்திக்கான்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பங்கேற்க இருந்த பிப்ரவரி 22, சனிக்கிழமை மறைக்கல்வி உரை மற்றும் பிப்ரவரி 23, ஞாயிற்றுக்கிழமை திருத்தொண்டர்களுக்கான யூபிலி சிறப்புத் திருப்பலி ஆகியவை இரத்து செய்யப்பட்டுள்ளதாகத் திருப்பீடச் செய்தித் தொடர்பகம் அறிவித்துள்ளது.

பிப்ரவரி 18, செவ்வாய்க்கிழமை திருப்பீடச் செய்தித் தொடர்பகம் வெளியிட்ட தகவல்களின்படி, பிப்ரவரி 23, ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ள, திருத்தொண்டர்களுக்கான யூபிலி சிறப்புத் திருப்பலிக்கு, புதிய வழிகளில் நற்செய்தி அறிவித்தலை ஊக்குவிக்கும் திருப்பீடத்துறையின் தலைவர், பேராயர் ரீனோ பிசிகெல்லா அவர்கள் தலைமையேற்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர் மருத்துவ சிகிச்சைக் காரணமாக திருத்தந்தையின் பொதுச்சந்திப்புக்கள் அனைத்தும் இரத்து செய்யப்பட்டுள்ளன. கடந்த பிப்ரவரி 14 வெள்ளிக்கிழமை பிற்பகல் முதல் உரோம் ஜெமெல்லி மருத்துவமனையில் மூச்சுக்குழல் அழற்சி நோய் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

பிப்ரவரி 23, ஞாயிற்றுக்கிழமை வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவிலில் உரோம் உள்ளூர் நேரம் காலை 9 மணியளவில் நடைபெற உள்ள திருப்பலிக்குத் திருத்தந்தைக்குப் பதிலாக பேராயர் ரீனோ பிசிகெல்லா அவர்கள் தலைமையேற்பார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

18 பிப்ரவரி 2025, 12:14