இறை இரக்கம் அழைப்புவிடுக்கும் மனமாற்றம் குறித்து தியானிப்போம்
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்
நம் ஒவ்வொருவருக்கும் இறை இரக்கம் அழைப்புவிடுக்கும் மனமாற்றம் குறித்து தியானிப்பதாக பிப்ரவரி 25, செவ்வாய்க்கிழமையன்று வெளியிட்ட டுவிட்டர் குறுஞ்செய்தியில் கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
வரவிருக்கும் தவக்காலத்தில் யூபிலி ஆண்டின் அருள்வரத்தால் வளம்பெற்றவராக, தான் “எதிர்நோக்கில் இணந்து நடைபோடுவது” குறித்தும், நமக்கு இறைஇரக்கம் விடும் மனமாற்றத்தின் அழைப்பை கண்டுகொள்வது குறித்தும் தியானித்ததாக தன் செய்தியில் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மார்ச் 5ஆம் தேதி சாம்பல் புதனுடன் துவங்கும் தவக்காலத்திற்கெனச் செய்தி ஒன்றையும் வெளியிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
தவக்காலத்தைத் தொடர்ந்து இயேசுவின் உயிர்ப்பு விழா இவ்வாண்டு ஏப்ரல் மாதம் 20ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்