MAP

பிரான்சில் திருவழிபாட்டுக் கொண்டாட்டத்தின்போது பிரான்சில் திருவழிபாட்டுக் கொண்டாட்டத்தின்போது  (AFP or licensors)

இறைமக்களின் ஆன்மீக வாழ்வுக்கு உதவும் வழிபாட்டுக் கொண்டாட்டம்

திருத்தந்தை பிரான்சிஸ் : இறை ஞானத்தை செபம், தியானம் ஆகியவை மூலம் பெறவேண்டும், மனித ஞானத்தை கல்வி, பகுப்பாய்வு மற்றும் கவனமாக செவிமடுத்தல் வழிப் பெறவேண்டும்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

திருஅவையில் ஆயர்கள் நிறைவேற்றும் திருவழிபாட்டுக் கொண்டாட்டங்களுக்கு பொறுப்பானவர்களுக்கு என உரோம் நகரில் நடத்தப்படும் கல்வி பாடத் திட்டத்தில் பங்கு பெறுவோருக்கு செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

உரோம் நகரின் ஜெமெல்லி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவரும் நிலையிலும் அங்கிருந்து இச்செய்தியை அனுப்பியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வழிபாட்டு வாழ்வை பாதுகாக்கவும், ஊக்குவிக்கவும் ஒவ்வொருவருக்கும் இருக்கும் கடமைகளை வலியுறுத்தி தன் கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார்.

உரோம் நகரின் புனித ஆன்சல்ம் வழிபாடுகளுக்கான பாப்பிறை கல்வி நிறுவனத்தால் நடத்தப்படும் கல்வி பாடத்தில் பங்குபெறுபவர்களுக்கு பிப்ரவரி 26ஆம் தேதி கையெழுத்திட்டு வெள்ளிக்கிழமையன்று அனுப்பப்பட்டுள்ள இந்த செய்தி, இறைமக்களின் ஆன்மீக வாழ்வுக்கு உதவும் வகையில் வழிபாட்டுக் கொண்டாட்டங்கள் குறித்து இறையியல் முறையிலும் நடைமுறைக் கொண்டாட்ட வகையிலும் கற்றுக் கொள்வது அவசியம் என்பதை வலியுறுத்துகிறது.

திருவழிபாட்டுக் கொண்டாட்டங்களுக்குப் பொறுப்பாக இருப்பவர்கள், இறையியலாளர்கள் அல்ல, மாறாக சமூகத்தின் செப வாழ்வுப் பணியில் ஆசிரியர்களாக இருப்பவர்கள் எனவும் தெரிவித்துள்ளார் திருத்தந்தை.

இறை ஞானத்தை செபம், தியானம் ஆகியவை மூலம் பெறவேண்டும் எனவும், மனித ஞானத்தை கல்வி, பகுப்பாய்வு மற்றும் கவனமாக செவிமடுத்தல் வழிப் பெறவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

28 பிப்ரவரி 2025, 15:03