MAP

உரோம் ஜெமெல்லி மருத்துவமனை  உரோம் ஜெமெல்லி மருத்துவமனை   (ANSA)

திருத்தந்தையின் புதன் பொது மறைக்கல்வி இரத்து

தொடர் சிகிச்சையின் காரணமாக திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் தனிப்பட்ட மற்றும் பொது சந்திப்புக்கள் இரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் வருகின்ற புதன்கிழமை பொது மறைக்கல்வி உரையும் இரத்து செய்யப்பட்டுள்ளது.

மெரினா ராஜ் - வத்திக்கான்

தொடர் மருத்துவ சிகிச்சைக் காரணமாக பிப்ரவரி 1̀9, புதன்கிழமை நடைபெற இருந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் புதன் தொடர் பொதுமறைக்கல்வி உரையானது இரத்து செய்யப்பட்டுள்ளதாக செய்தியாளர்களுக்குத் தெரிவித்தார் திருப்பீடச் செய்தித் தொடர்பகத்தின் இயக்குநர் மத்தேயு புரூனி.

பிப்ரவரி 17 திங்கள்கிழமை வெளியிடப்பட்ட தகவல்களில் இவ்வாறு தெரிவித்துள்ள திருப்பீடச் செய்தித் தொடர்பகத்தின் இயக்குநர் மத்தேயு புரூனி அவர்கள், கடந்த சில நாள்களாக மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின் முடிவில்,  மூச்சுக்குழலில் தொற்று அழற்சி இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளதாகவும், இதன் விளைவாக சிகிச்சையில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது என்றும் எடுத்துரைத்துள்ளார்.

தொடர் சிகிச்சையின் காரணமாக திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் தனிப்பட்ட மற்றும் பொது சந்திப்புக்கள் இரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் வருகின்ற, பிப்ரவரி 19, புதன்கிழமை பொது மறைக்கல்வி உரையும் இரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

17 பிப்ரவரி 2025, 14:00