நியூ ஆர்லியன்ஸ் தாக்குதலில் இறந்தவர்களுக்குத் திருத்தந்தை அஞ்சலி!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
ஜனவரி 1, இப்புதன்கிழமை, புத்தாண்டின் முதல் நாளன்று நியூ ஆர்லியன்ஸில் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களுக்குத் தனது ஆழந்த இரங்களைத் தெரிவித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்
பேராயர் கிரிகோரி அய்மோன்ஸ் அவர்களுக்கு அனுப்பியுள்ள இந்த இரங்கல் செய்தியில், தனது ஆன்மிக நெருக்கத்தை உறுதிப்படுத்தியுள்ளதுடன், இத்துயரச் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்காக இறைவேண்டல் செய்வதாகவும், அமைதி மற்றும் வலிமையின் அடையாளமாகத் தனது ஆசீர்வாதங்களை அவர்களுக்கு வழங்குவதாகவும் உரைத்துள்ளார்.
இந்தத் தாக்குதல் நடத்திய டெக்சாஸ் குடியிருப்பாளரும், அமெரிக்க ராணுவ வீரருமான ஷம்சுத்-தின் ஜப்பார், காவலருடன் ஏற்பட்ட மோதலின் போது கொல்லப்பட்டார் என்றும், இதில் வேறு சிலருக்குத் தொடர்பு இருக்கலாமா என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர் என்றும் அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
திருத்தந்தையின் குறுஞ்செய்தி
ஜனவரி 2, வியாழக்கிழமை இன்று வெளியிட்டுள்ள தனது குறுஞ்செய்தி ஒன்றில், புலம்பெயர்ந்தோர், இடம்பெயர்ந்தோர் மற்றும் போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்காகவும், ஒரு சிறந்த உலகைக் கட்டியெழுப்புவதற்குத் தேவையான கல்விக்கான அவர்களின் உரிமை எப்போதும் மதிக்கப்பட வேண்டும் எனவும் நாம் ஒன்றிணைந்து இறைவேண்டல் செய்ய அழைப்புவிடுத்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்