MAP

திருத்தந்தை பிரான்சிஸ் திருத்தந்தை பிரான்சிஸ்   (AFP or licensors)

ஆறுதல் மற்றும் புதிய பாதைகளைத் திறக்கும் நற்செய்தியை வழங்குங்கள்

அன்பர்களே, உங்களின் இந்தத் திட்டம் பாதிக்கப்படக்கூடியவர்களின் மாண்பை மீட்டெடுக்கிறது மற்றும் எதிர்கால சந்ததியினருக்கு ஓர் ஒருங்கிணைந்த, நம்பிக்கை நிறைந்த கல்வியை ஊக்குவிக்கிறது : திருத்தந்தை பிரான்சிஸ்

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

நற்செய்தி விழுமியங்கள் மற்றும் கத்தோலிக்கச் சமூகப் படிப்பினைகளில் வேரூன்றிய உங்களின் இந்தத் திட்டம், கிறிஸ்துவின் அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் இரக்கத்தின் எடுத்துகாட்டைப் பிரதிபலிக்கிறது என்றும், இது வரவேற்கும் மற்றும் வெளியே சென்று அனைவருக்கும் பணியாற்றும் திருஅவையை வளர்க்கிறது என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்

ஜனவரி 10, இவ்வெள்ளியன்று, Écoles de Vie எனப்படும் திட்ட ஊக்குவிப்பாளர்கள் குழுவைத் திருப்பீடத்தில் சந்தித்தபோது இவ்வாறு கூறினார் திருத்தந்தை.  

மேலும் அவர்கள் மேற்கொண்டுள்ள இந்தத் திட்டம், கடவுளுடனான உறவுகளின் உருமாறும் ஆற்றலை எடுத்துக்காட்டுகிறது மற்றும் இளையோரின் திறனை உணர்ந்துகொள்ள அவர்களுக்கு அதிகாரம் அளிப்பதன் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது என்றும் எடுத்துக்காட்டினார்.

அவர்களின் இந்த முன்முயற்சியானது கல்விக்கான உலகளாவிய ஒப்பந்தத்தின் பார்வையுடன் ஒத்துப்போகிறது என்றும், மனிதாபிமான மற்றும் நற்செய்தியால் ஈர்க்கப்பட்ட உலகத்தை உருவாக்க உறுதிபூண்டுள்ள இரக்கமுள்ள நபர்களை வடிவமைக்கும் விரிவான கல்வியை ஊக்குவிக்கிறது என்றும் அவர்களுக்கு விளக்கினார் திருத்தந்தை.

அவர்களின் விடாமுயற்சியை ஊக்குவித்த திருத்தந்தை, அவர்களின் இந்தத் திட்டம் பாதிக்கப்படக்கூடியவர்களின் மாண்பை மீட்டெடுக்கிறது மற்றும் எதிர்கால சந்ததியினருக்கு ஓர் ஒருங்கிணைந்த, நம்பிக்கை நிறைந்த கல்வியை ஊக்குவிக்கிறது என்றும் சுட்டிக்காட்டினர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

10 ஜனவரி 2025, 14:32