காரித்தாஸ் அமைப்பால் உதவுபவர்களின் மாண்பு அங்கீகரிக்கப்பட வேண்டும்
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
உங்கள் எல்லா முயற்சிகளுக்கும் இயேசு வெகுமதி அளிப்பார், தூய ஆவியார் உங்கள் பணிகளை வழிநடத்துவார், தூய கன்னி மரியா தனது மேலங்கியால் உங்களை பாதுகாப்பார் என்றும், இதனால் நீங்கள் அனைத்து மக்களுக்குமான கவனிப்புடன் கூடிய அக்கறையையும் பாதுகாப்பையும் அவளிடமிருந்து கற்றுக்கொள்வீர்கள் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்
இலத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியனில் உள்ள காரித்தாஸ் அமைப்பின் தலைவர்கள் மற்றும் தேசிய இயக்குநர்களை ஜனவரி 15, புதன்கிழமை இன்று, திருப்பீடத்தில் சந்தித்தபோது இவ்வாறு அவர்களுக்கு நம்பிக்கை தெரிவித்தார் திருத்தந்தை.
இலத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் தீவுகளின் காரித்தாஸ் அமைப்பால் ஊக்குவிக்கப்பட்ட கவனிப்பு மற்றும் பாதுகாப்பின் கலாச்சாரமாக "பாதுகாப்பு" என்பதன் முக்கியத்துவத்தை தனது உரையில் அதிகம் வலியுறுத்தினார் திருத்தந்தை.
பாதுகாப்பு மற்றும் உத்தரவாதத்தை உள்ளடக்கியதாக ‘பாதுகாத்திடு’ என்ற இந்த வார்த்தை விவரிக்கப்படுகிறது என்று உரைத்த திருத்தந்தை, எசேக்கியேல் மற்றும் திருவெளிப்பாடு நூல்களில் உள்ள திருவிவிலிய குறிப்புகளிலிருந்து உத்வேகம் பெறுவது, பாதுகாப்பின் அடையாளத்துடன் தனிநபர்களை குறிப்பது பற்றியும் எடுத்துரைத்தார்.
காரித்தாஸ் அமைப்பால் உதவுபவர்களின் மாண்பு மற்றும் மனித நேயத்தை அங்கீகரிப்பதன் புனிதக் கடமையை எடுத்துக்காட்டிய திருத்தந்தை, கிறிஸ்துவில் சகோதரர் சகோதரிகளாக தங்கள் மதிப்பை உறுதிப்படுத்த திருச்சிலுவையால் அவர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்கின்றனர் என்றும் எடுத்துக்காட்டினார்.
அவர்களின் இந்தத் திருச்சிலுவை அடையாளம், கிறிஸ்துவின் முன்மாதிரி மற்றும் மற்றவர்களைப் பாதுகாத்து மதிக்க வேண்டும் என்ற தெய்வீகக் கட்டளையால் ஈர்க்கப்பட்டு, பாதிக்கப்படக் கூடியவர்களை பாதுகாப்பதற்கான அர்ப்பணிப்பை இது பிரதிபலிக்கிறது என்பதையும் சுட்டிக்காட்டினார் திருத்தந்தை.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்