MAP

திருத்தந்தை பிரான்சிஸ். திருத்தந்தை பிரான்சிஸ்.  (ANSA)

ஒரே குடும்பத்தைச் சார்ந்த கிறிஸ்தவர்களாக மாற...

58ஆவது கிறிஸ்தவ ஒன்றிப்பு வாரமானது சனவரி 18 சனிக்கிழமை முதல் 25 சனிக்கிழமை வரை நடைபெற உள்ளது.

மெரினா ராஜ் – வத்திக்கான்

எல்லாரும் ஒன்றாய் இருப்பார்களாக! தந்தையே, நீர் என்னுள்ளும் நான் உம்முள்ளும் இருப்பதுபோல் அவர்களும் ஒன்றாய் இருப்பார்களாக! என்ற இறைவார்த்தைக்கேற்ப இவ்வாண்டும் கிறிஸ்தவர்களாகிய நாம் ஒரே குடும்பமாக ஒன்றிணைந்து வாழ கிறிஸ்தவ ஒன்றிப்பு வாரத்தில் அழைக்கப்படுகின்றோம் என்று குறுஞ்செய்தி ஒன்றினை தனது டுவிட்டர் வலைத்தளப்பக்கத்தில் பதிவிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

சனவரி 18 சனிக்கிழமை ஹேஸ்டாக் செபம் மற்றும் கிறிஸ்தவ ஒன்றிப்பு என்னும் தலைப்பில் வெளியிட்டுள்ள குறுஞ்செய்தியில் இவ்வாறு தெரிவித்துள்ள திருத்தந்தை அவர்கள், கிறிஸ்தவ ஒன்றிப்பு என்பது விருப்பத்தேர்வு அல்ல என்றும் அச்செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

ஒரே குடும்பத்தை சார்ந்த கிறிஸ்தவர்களாக மாற வாழ கிறிஸ்தவர்களாகிய நாம் அழைக்கப்பட்டுள்ளோம் என்றும், அனைவரும் ஒன்றாக இருப்பார்களாக என்ற யோவான் நற்செய்தியின் இறைவார்த்தைக்கேற்ப வாழ நாம் செபிக்கவேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ள திருத்தந்தை அவர்கள், கிறிஸ்தவ ஒன்றிப்பு என்பது விருப்பத்தேர்வல்ல என்றும் அதில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வாண்டு 58ஆவது கிறிஸ்தவ ஒன்றிப்பு வாரமானது சனவரி 18 சனிக்கிழமை முதல் 25 சனிக்கிழமை வரை நடைபெற உள்ளது. யோவான் நற்செய்தியில் இடம்பேரும் இலாசர் உயிர்த்தெழுதல் நிகழ்வின்போது இயேசு மார்த்தாவிடம் கேட்ட, “இதை நீ நம்புகிறாயா?” என்ற இறைவார்த்தையானது கருப்பொருளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

18 ஜனவரி 2025, 15:22