கிறிஸ்தவர்களை ஒன்றிணைக்கும் தூய ஆவியின்படி உருவாகும் செபம்
மெரினா ராஜ் – வத்திக்கான்
கடவுளின் குடும்பமாக கிறிஸ்தவர்களை ஒன்றிணைப்பது தூய ஆவியின்படி உருவாகும் செபம் என்றும், கடவுளின் விருப்பமான இத்தகைய செபம் போன்று வேறு எதுவும் இல்லை என்றும் குறுஞ்செய்தி ஒன்றில் பதிவிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
சனவரி 20 திங்கள்கிழமை கிறிஸ்தவ ஒன்றிப்பு வாரநாளை முன்னிட்டு ஹேஸ்டாக் கிறிஸ்தவ ஒன்றிப்பு என்னும் தலைப்பில் குறுஞ்செய்தி ஒன்றினை தனது டுவிட்டர் வலைதளப்பக்கத்தில் வெளியிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
தூயஆவியின்படி செபிப்பது போன்றது எதுவுமில்லை அச்செபமானது, கிறிஸ்தவர்களைக் கடவுளின் குடும்பமாக ஒன்றுபட்டதாக உணர வைக்கிறது என்றும், ஒவ்வொரு நபரின் தேவைகளையும் எவ்வாறு அங்கீகரிப்பது என்பதை கிறிஸ்தவர்கள் அறிந்திருக்கிறார்கள் என்றும் அச்செய்தில் வலியுறுத்தியுள்ளார்.
கிறிஸ்தவ ஒன்றிப்பு செபத்தினால் கிறிஸ்தவர்கள் அனைத்து மக்களின் வேண்டுகோளாகவும் பரிந்துரையாகவும் மாறுகிறார்கள் என்றும், ஒவ்வொரு நபரின் தேவையை எவ்வாறு அங்கீகரிப்பது என்பதை அத்தகைய செபத்தை செபிப்பவர்கள் அறிந்திருக்கின்றார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்