MAP

வத்திக்கான் வளாகத்தில் கிறிஸ்து பிறப்புக் குடிலின் முன் செபிக்கும் திருத்தந்தை பிரான்சிஸ் வத்திக்கான் வளாகத்தில் கிறிஸ்து பிறப்புக் குடிலின் முன் செபிக்கும் திருத்தந்தை பிரான்சிஸ்   (ANSA)

அன்பையும் ஒளியையும் இவ்வுலகிற்குக் கொண்டு வருவோம்

அன்று பெத்லகேமில் வானதூதர்கள் பாடியவாறு இன்றைய உலகிற்குத் தேவையான ஒளியையும் அமைதியையும் மீண்டும் கண்டறிவோம்

மெரினா ராஜ் - வத்திக்கான்

கடவுளையும்  ஒருவர் மற்றவரையும் அன்பு செய்வோம் என்றும், வாழ்க்கைப் பாதையை மாற்றுவதற்கும், தேர்ந்தெடுப்பதற்கும், நம்பிக்கைக்குத் திரும்புவதற்கும் ஒருவர் மற்றவருக்கு உதவுவோம் என்றும் குறுஞ்செய்தி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஜனவரி 4 சனிக்கிழமை ஹேஸ்டாக் கிறிஸ்து பிறப்புக் காலம் என்ற தலைப்பில் வெளியிட்ட குறுஞ்செய்தியில் இவ்வாறு தெரிவித்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஒருவர் மற்றவரை அன்பு செய்வதன் வழியாக உலகிற்குத் தேவையாக உள்ள அன்பையும் ஒளியையும் நம்மால் மீண்டும் கண்டறிய முடியும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

கடவுளையும் ஒருவர் மற்றொருவரையும் அன்பு செய்வோம். வாழ்க்கைப் பாதையை மாற்றுவதற்கும், சிறந்த வாழ்வைத் தேர்ந்தெடுப்பதற்கும், நம்பிக்கை வாழ்க்கைக்குத் திரும்புவதற்கும் இச்செயல் உதவும் என்று நம்புவோம் எனவும், அன்று பெத்லகேமில் வானதூதர்கள் பாடியவாறு இன்றைய உலகிற்குத் தேவையான ஒளியையும் அமைதியையும் மீண்டும் கண்டறிவோம் எனவும் அக்குறுஞ்செய்தியில் தெரிவித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

04 ஜனவரி 2025, 15:34