MAP

மூன்று அரசர்கள் போல உடையணிந்த மக்கள் மூன்று அரசர்கள் போல உடையணிந்த மக்கள்  (ANSA)

தடைகளைத் தாண்டி இயேசுவைக் காண முயலவேண்டும்

வரலாற்றில் மிகத்தனித்துவமானது ஒன்று நடைபெற இருக்கின்றது அதனை நாம் தவறவிடக்கூடாது என்பதை நன்கு அறிந்து செயல்பட்டவர்கள் ஞானிகள்

மெரினா ராஜ் – வத்திக்கான்

இறைவனைச் சந்திப்பதற்கு உதவும் ஒளியாக நாம் ஒருவருக்கொருவர் இருக்கவேண்டும் என்றும், இறைமகனைச் சந்திப்பதற்காக பல்வேறு தடைகளைத்தாண்டி வந்த ஞானிகள் போல நாமும் இயேசுவைக் காண முயலவேண்டும் என்றும் குறுஞ்செய்தி ஒன்றில் பதிவிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஜனவரி 6 திங்கள்கிழமை திருக்காட்சிப்பெருவிழாவை முன்னிட்டு ஹேஸ்டாக் திருக்காட்சிப்பெருவிழா மற்றும் இன்றைய நற்செய்தி என்னும் தலைப்புக்களின் கீழ் தனது கருத்துக்களை டுவிட்டர் குறுஞ்செய்தியாக தனது வலைதளப்பக்கத்தில் பதிவிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

தங்களது கண்களை வானத்தை நோக்கித்திருப்பி விண்மீன்களைக் கண்ட ஞானிகளைப் பற்றி சிந்திக்கும் வேளையில், மற்றவர்கள் இறைவனைச் சந்திப்பதற்கு ஒளியாக நாம் வழிகாட்ட வேண்டும் அதற்கான அருளை இறைவனிடம் நாடுவோம் என்று தனது முதல் குறுஞ்செய்தியில் பதிவிட்டுள்ளார் திருத்தந்தை .

விண்மீனால் ஈர்க்கப்பட்ட ஞானிகள் அதனால் வழிநடத்தப்பட்ட அரசராம் மெசியாவைப் பார்க்க அனைத்து சிரமங்கள் மற்றும் இடர்ப்பாடுகளைக் கடந்து வந்தார்கள் என்றும், வரலாற்றில் மிகத்தனித்துவமானது ஒன்று நடைபெற இருக்கின்றது அதனை நாம் தவறவிடக்கூடாது என்பதை நன்கு அறிந்து செயல்பட்டவர்கள் ஞானிகள் என்றும் தனது இரண்டாவது குறுஞ்செய்தியில் பதிவிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

06 ஜனவரி 2025, 15:43