இறையாட்சியின் அடையாளங்களை வெளிப்படுத்தும் கத்தோலிக்கத் தகவல்தொடர்பு
மெரினா ராஜ் - வத்திக்கான்
கத்தோலிக்கத் தகவல் தொடர்பு என்பது தனியான ஒன்றோ, கத்தோலிக்கர்களுக்கு மட்டுமானதோ அல்ல, மாறாக இறையாட்சியின் அடையாளங்களைக் கேட்கவும் எடுத்துரைக்கவும் தெரிந்த ஒரு திறந்தவெளி சான்றுள்ள வாழ்க்கை என்றும், உண்மையான உறவுகளின் வரவேற்கத்தக்க இடம் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
சனவரி 27 திங்கள் கிழமை வத்திக்கானின் கிளமெந்தினா அறையில் ததகவல் தொடர்புகளுக்கான ஆயர் பணிக்குழுக்களின் தலைவர்கள் மற்றும் தேசியத் தகவல் தொடர்பு அலுவலகங்களின் இயக்குநர்கள் என ஏறக்குறைய 250 பேரைச் சந்தித்தபோது இவ்வாறு கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ծ்றிணைதல், வலையமைப்பு என்னும் இரண்டு தலைப்புக்களின்கீழ் தனது கருத்துக்களை அவர்களுக்கு எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள், கத்தோலிக்கத் தகவல் தொடர்பு என்பது இறையாட்சி அருகில் உள்ளது என்பதைக் காட்டுவது என்றும், நாம் தொடர்பு கொள்ளும்போது, மொழிகளை, உறவுப் பாலங்களை உருவாக்கும் படைப்பாளிகளாகின்றோம் என்றும் கூறினார்.
ծ்றிணைதல்
ஒன்றிணைந்து இருப்பதன் வழியாகவே நாம் சந்தித்த அத்தனை அழகான விடயங்களையும் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளமுடியும் என்றும், நம்மிடம் அதிகமான வளங்கள் இருப்பதால் அல்ல, மாறாக நாம் ஒருவரை ஒருவர் அன்பு கூர்வதால் நம்மால் ஒன்றிணைந்து இருக்க முடியும் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஒன்றிணைந்து இருப்பதால் நமது எதிரிகளை அன்பு செய்யவும், தவறு செய்பவர்களை மன்னித்து செயல்களில் மீண்டும் ஈடுபடுத்தவும், பிரிந்து இருப்பவர்களை ஒன்றிணைக்கவும் நாம் வலிமை பெறுகின்றோம் என்று கூறிய திருத்தந்தை அவர்கள், எதிர்நோக்கை விதைப்பதில் சோர்வடைந்து விடாதீர்கள் என்றும், அன்புடன் தகவல் தொடர்புகளைச் செய்யுங்கள் என்றும் வலியுறுத்தினார்.
தகவல் தொடர்பு என்பது நுட்பமான வகையில் கேட்டச் சொற்றொடர்களை அல்லது குரல்களைத் திரும்பத் திரும்பச் சொல்வதோ அல்லது பத்திரிகை வெளியீடுகளை எழுதுவதோ மட்டுமோ அல்ல, மாறாக அன்போடு தொடர்புகொள்வது அது அன்பின் செயல் என்றும், இலவசமாக செய்யப்படும் அன்பின் செயல் மட்டுமே நன்மைகளின் வலைப்பின்னல்களை நெய்கிறது. எனவே வலைகளை ஒவ்வொரு நாளும் பொறுமையுடனும் நம்பிக்கையுடனும் பராமரிக்க வேண்டும் சரிசெய்ய வேண்டும் என்றும் கூறினார்.
வலைப்பின்னல்
நெட்வொர்க் என்ற வார்த்தை மின்னனு உலகில் பழக்கமான மிகவும் தொடர்புடைய ஒரு வார்த்தை என்று அறிந்துள்ள நாம், இது பழங்காலத்தில் பேதுரு முதலான சீடர்கள் இயேசுவால் அழைக்கப்பட்ட போது "உங்களை மனிதர்களைப் பிடிப்பவர்களாக்குவேன் என்று கூறியதை நினைவுபடுத்துகின்றது" என்றும் எடுத்துரைத்தார் திருத்தந்தை.
வலைப்பின்னல் திறன்கள், அறிவு, பங்களிப்புக்கள் போன்றவை எல்லாவற்றையும் முறையாக அறிவிக்கவும், தவறான தகவல்களிலிருந்து காப்பாற்றப்படவும் முடியும் என்று வலியுறுத்தினார் திருத்தந்தை.
மின்னனு யுகத்தின் புதிய கருவிகள் மற்றும் செயற்கை நுண்ணறிவுக்கு நன்றி என்று கூறிய திருத்தந்தை அவர்கள், தொழில்நுட்பத்தை ஒரு வழிபாட்டுப் பொருளாக மாற்றுவதற்குப் பதிலாக, அதிக முயற்சி எடுத்து எவ்வளவு அதிகமாக ஒன்றிணைந்து செய்ய முடியும் என்பதைப் பற்றி சிந்திப்போம். அதே வேளையில் செயற்கை நுண்ணறிவை விட, இயற்கை நுண்ணறிவைத் தூண்டி அதில் வளரவேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
நமது வலையமைப்பு என்பது திருஅவையின் ஒரு குரலாக, அது தன்னை விட்டு வெளியேறுவதன் வழியாக மட்டுமே தன்னையும் அதன் நம்பிக்கைக்கான காரணங்களையும் கண்டுபிடிக்கிறது என்றும், "நான் கதவருகில் நின்று தட்டுகிறேன்" என்ற இயேசுவின் வார்த்தைகள் அவர் உள்ளே நுழைவதற்காக அவர் இதைச் சொல்கிறார் என்றும், கூறிய திருத்தந்தை அவர்கள்,பலமுறை கடவுள் கிறிஸ்தவர்களாகிய நம் உள்ளத்தை தட்டுகின்றார் நாம் அவரை வெளியே எல்லோரிடமும் பகிர்ந்து கொள்ளவேண்டும் என்றும் எடுத்துரைத்தார்.
படுகுழியில் விழும் சூழலிலும், எதுவும் இழக்கப்படவில்லை என்ற நம்பிக்கையுடன், எப்போதும் நாம் ஒருவரையொருவர் நம்புதல், கடவுளுடன் சேர்ந்து அனைவரும் ஒன்றாக இருத்தல் போன்றவற்றினால் மீண்டும் தொடங்க முடியும் என்பது தான் நமது தொடர்பு வலிமையின் இரகசியம் என்று எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள், ஒரு வலையமைப்பாக இருப்பதன் வழியாக எதிர்நோக்கின் கதைகளை எவ்வாறு ஒன்றாக உருவாக்குவது என்பது பற்றி சிந்திக்கவேண்டும் என்றும் கூறினார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்