MAP

வத்திக்கான் நகருக்குப் பாதுகாப்பு வழங்கும் காவல் துறையின் உயர் அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுடன் திருத்தந்தை வத்திக்கான் நகருக்குப் பாதுகாப்பு வழங்கும் காவல் துறையின் உயர் அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுடன் திருத்தந்தை   (Vatican Media)

பணிவுடன் பணியாற்றுவதே மீட்புக்கான அடையாளமாக அமைகிறது!

திருத்தந்தை தனது உரையில் காவல் அதிகாரிகளின் தன்னலமற்ற சேவை மற்றும் தன்னலமற்ற அர்ப்பணத்திற்காக அவர்களைப் பாராட்டினார். மேலும் யூபிலி ஆண்டின் புனிதக் கதவை எடுத்துக்காட்டி தங்களைப் புதுப்பித்துக்கொள்ளவும் அவர்களுக்கு அழைப்புவிடுத்தார்.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

பாதுகாப்பு என்பது கண்ணுக்குத் தெரியாத ஒரு நன்மை, அது இல்லாதபோதுதான் அதன் முக்கியத்துவம் வெளிப்படும் என்றும், இது ஆண்டின் ஒவ்வொரு நாளும், இரவும் பகலும் தொடர்ந்து, அறிவார்ந்த விழிப்புணர்வின் வழியாகக் கட்டியெழுப்படுகிறது என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்

ஜனவரி 23, வியாழக்கிழமை இன்று, வத்திக்கான் நகருக்குப் பாதுகாப்பு வழங்கும் காவல் துறையின் உயர் அதிகாரிகள் மற்றும் பணியாளர்களைத் திருப்பீடத்தில் சந்தித்தபோது இவ்வாறு கூறிய திருத்தந்தை, பாவத்தால் காயப்பட்ட மனித இயல்பு, பொது நன்மைக்காகச் சேவை செய்யும் பொதுப் படைகளின் வேலையை இன்றியமையாததாக ஆக்குகிறது என்றும் குறிப்பிட்டார்.

சமூகத்திற்கான உங்கள் சேவையில் நீங்கள் பெருமைப்படலாம், அதேவேளையில், நீங்கள் பணிவாகவும் பணியாற்ற வேண்டும் என்று அவர்களிடம் கேட்டுக்கொண்ட திருத்தந்தை, இந்த மனத்தாழ்மைதான், உங்களின் இதயங்களைக் கடவுளை நோக்கித் திறக்கச் செய்து உதவி, இறைஆசீர் மற்றும் மீட்புக்கான உங்கள் தேவையை அடையாளம் காண உங்களை அனுமதிக்கிறது என்றும் சுட்டிக்காட்டினார்.

இந்த யூபிலி ஆண்டு எடுத்துக்காட்டும் புனிதக் கதவின் அடையாளத்தின் வழியாக, ஆன்மிகப் புதுப்பித்தலை அவர்களிடம் வலியுறுத்திய திருத்தந்தை, பொது நலனுக்கான சேவையின் முக்கியத்துவத்தை அவர்களுக்கு எடுத்துரைத்துடன், அவர்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வுக்காக இறைவேண்டல் செய்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

23 ஜனவரி 2025, 12:50