மக்களின் நல்வாழ்வு மற்றும் பாதுகாப்புக்கு முன்னுரிமை கொடுங்கள்
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
நாம் தொடங்கியுள்ள இந்த யூபிலி ஆண்டு வாழ்க்கைப் பயணத்தை மறுபரிசீலனை செய்வதற்கும், நமது இறுதி இலக்கை அடைவதற்கான தடைகளை அகற்றும் போது இன்றியமையாதவற்றை அடையாளம் காண்பதற்கும் ஒரு வாய்ப்பை வழங்குகிறது என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.:
ஜனவரி 23, வியாழக்கிழமை இன்று, இத்தாலியின் தானியங்கி வாகனக் கழகத்தின் பிரதிநிதிகளைத் திருப்பீடத்தில் சந்தித்தபோது இவ்வாறு கூறிய திருத்தந்தை, கல்வி மற்றும் சுற்றுச்சூழலின் கருப்பொருள்களை நம்பிக்கை மற்றும் சிறந்த எதிர்காலத்திற்கான பாதைகளாக ஏற்றுக்கொள்ள அவர்களை ஊக்குவித்தார்.
சாலைப் பாதுகாப்பு மற்றும் பொறுப்பான நடத்தையை கல்வி முயற்சிகள் வழியாக வளர்க்க வேண்டும் என்பதை அவர்களிடம வலியுறுத்திய திருத்தந்தை, குறிப்பாக, இளைஞர்களை இலக்காகக் கொண்டு, சாலை இறப்புகள் இல்லாத இலக்கை அடைய வேண்டும் என்றும் சுட்டிக்காட்டினார்.
சுற்றுச்சூழல் பிரச்சனைகளில், நிலையான மற்றும் அணுகக்கூடிய இயக்கத்தை ஊக்குவிப்பதன் வழியாக மாசு, போக்குவரத்து மற்றும் ஆற்றல் நுகர்வைச் சமாளிக்க வேண்டியதன் அவசரத் தேவையையும் அவர்களுக்கு எடுத்துரைத்தார் திருத்தந்தை
கடந்த 120 ஆண்டுகளாக, காலத்திற்கு ஏற்றவாறு மக்களுக்கு சேவை செய்திருக்கிறீர்கள் என்றும், மக்களின் நல்வாழ்வு மற்றும் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிப்பதைத் தொடருங்கள் என்றும் அவர்களிடம் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்