நீங்கள் எதிர்நோக்கின் சாட்சிகளாகத் திகழ்கிறீர்கள்!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
நீங்கள் இயேசுவின் நண்பர்கள், நீங்கள் துணிவு கொண்டவர்கள், இந்த வழியில், நீங்கள் பெரியவர்களான எங்களுக்கும் உங்கள் சகாக்களுக்கும் நம்பிக்கையின் சாட்சிகளாகத் திகழ்கிறீர்கள் என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்
போலந்து நாட்டின் Wroclaw நகரிலுள்ள பிளவையியல் மற்றும் குழந்தை மருத்துவத்தின் குருதியியல் மருத்துவ அகத்தின் குழந்தை நோயாளர்களைத் திருப்பீடத்தில் சந்தித்தபோது இவ்வாறு உரைத்த திருத்தந்தை, யூபிலி ஆண்டையொட்டிய தனது சிந்தனைகளை அவர்களுடன் பகிர்ந்துகொண்டார்.
நம்பிக்கையையும் அன்பையும் ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்ளும் இந்த வாய்ப்பிற்காகத் தனது மகிழ்ச்சியையும் நன்றியையும் வெளிப்படுத்திய திருத்தந்தை, குறிப்பாக குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் இருப்பு வழியாக, இயேசு அவர்களிடம் இருக்கிறார் என்ற நம்பிக்கையின் காரணமாக அவர்களிடம் எதிர்நோக்கின் அறிகுறிகள் காணப்படுவதாகவும் தெரிவித்தார்.
இயேசுவுடனான நட்பின் முக்கியத்துவத்தை அவர்களிடம் வலியுறுத்திக் கூறிய திருத்தந்தை, அவர்களின் மகிழ்ச்சியிலும் துன்பத்திலும் இயேசு பங்குகொள்கிறார் என்று கூறியதுடன், தனது செபக் கருத்துக்களுக்காக இறைவேண்டல் செய்யுமாறும் அவர்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.
குழந்தைகளை ஆதரிக்கும் பெற்றோர்கள், நலப் பணியாளர்கள் மற்றும் பராமரிப்பாளர்களின் அன்பு மற்றும் கவனிப்பை அவர்களுக்கு எடுத்துக்காட்டிய திருத்தந்தை, மருத்துவ வசதி இல்லாத குழந்தைகளுக்காக இறைவேண்டல் செய்யவும் அழைப்பு விடுத்தார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்