MAP

கர்தினால் Angelo Amato கர்தினால் Angelo Amato  

கர்தினால் Angelo Amato அவர்களின் மறைவிற்கு திருத்தந்தை இரங்கல்!

Angelo Amato அவர்கள் விசுவாசக் கோட்பாட்டிற்கான திருப்பீடத் துறையின் தலைவராகவும், புனிதர்பட்ட படிநிலைகளுக்கான திருப்பீடத்துறையின் தலைவராகவும் சிறந்தவிதத்தில் பணியாற்றியவர்: திருத்தந்தை பிரான்சிஸ்

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

சலேசிய சபையைச் சேர்ந்த கர்தினால் Angelo Amato அவர்கள் இறைபதம் அடைந்தார் என்ற செய்தியைக் கேட்டு தான் மிகவும் வருந்துவதாகவும், அவரது சபையைச் சேர்ந்த தலைவர்களுக்கும், மறைந்த கர்தினாலின் குடும்ப உறுப்பினர்களுக்கும் தனது நெருக்கத்தைத் தெரிவித்துக் கொள்வதாகவும் கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

டிசம்பர் 1, இச்செவ்வாயன்று இறைபதம் அடைந்த கர்தினால் Angelo Amato அவர்களின் மறைவிற்கு, ஜனவரி 1, இப்புதனன்று அனுப்பியுள்ள இரங்கல் செய்தியில் இவ்வாறு கூறியுள்ள திருத்தந்தை, மனித உணர்வுடனும் தாராள மனப்பான்மையுடனும் திருஅவையின் வளர்ச்சிக்கும் நற்செய்தி அறிவிப்புப் பணிக்கும் தன்னை முழுவதுமாக அர்ப்பணித்துக்கொண்டவர் என்றும் அதற்காகத் தான் கடவுளுக்கு நன்றி கூறுவதாகவும் உரைத்துள்ளார்.

விசுவாசக் கோட்பாட்டிற்கான திருப்பீடத் துறையின் தலைவராகவும், புனிதர்பட்ட படிநிலைகளுக்கான திருப்பீடத் துறையின் தலைவராகவும் கர்தினால் Amato அவர்கள் சிறந்ததொரு அருள்பணியாளருக்குரிய பாங்குடனும், இறையியல் தயாரிப்புடனும் திருஅவைக்குப் பணியாற்றையதையும் தனது இரங்கல் செய்தியில் நினைவுகூர்ந்துள்ளார் திருத்தந்தை.

'என் அருள் உனக்குப் போதும்' என்ற இறைவார்த்தையை மனதில் ஏந்தி  நன்மைத்தனமும் விழிப்புணர்வும் கொண்டு வாழ்ந்திட்ட இவரின் ஆன்மாவுக்கு இறைவன் என்றுமுள்ள பேரின்ப வாழ்வை வழங்க, தான் தொடர்ந்து இறைவேண்டல் செய்வதாகவும் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை.

கிறிஸ்தவர்களின் சகாய அன்னை, அனைத்துப் புனிதர்கள் மற்றும் அருளாளர்கள்  துணையுடன் அவர் என்றுமுள விண்ணகப் பேரின்ப வாழ்வின் விருந்திற்கு அழைத்துச் செல்லப்படுவார் என்று தான் உறுதியாக நம்புவதாகவும் கூறியுள்ள திருத்தந்தை, அவரது மறைவால் துயருறும் அனைவருக்கும் தனது ஆசிகளை அனுப்புவதாகவும் கூறி இந்த 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

02 ஜனவரி 2025, 14:57