திருத்தந்தையைச் சந்தித்த கர்தினால் Augusto Paolo Lojudice
மெரினா ராஜ் – வத்திக்கான்
சியன்னா, கோல்லே வால் திஎல்சா, மோன்தல்சினோ மறைமாவட்ட ஆயரான கர்தினால் Augusto Paolo Lojudice அவர்கள் டிசம்பர் 7 சனிக்கிழமை வத்திக்கானில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைச் சந்தித்து ஐரோப்பாவில் முன்னணி வீட்டு உபகரணங்கள் வழங்குனராக இருக்கும் பெக்கோ ஐரோப்பா நிறுவனத்தின் தொழிலாளர்கள் பிரச்சனைகள் குறித்து பகிர்ந்து கொண்டார்.
Ascoli Piceno மறைமாவட்ட ஆயர் மற்றும் Trontoவின் San Benedetto உயர்மறைமாவட்ட ஆயர்களுடன் திருத்தந்தையைச் சந்தித்த கர்தினால் Paolo Lojudice அவர்கள், தங்கள் பகுதியில் நிலவும் பிரச்சனைகளைப் பகிர்ந்து கொள்ள திருத்தந்தை வாய்ப்பளித்ததற்காக நன்றி கூறுவதாகவும், நூற்றுக் கணக்கான தொழிலாளர்கள் வேலை வாய்ப்பின்றி துன்புறுவதாகவும் வத்திக்கான் செய்திகளுக்கு எடுத்துரைத்தார்.
அவசரகால உதவி தேவைப்படும் நிலையில் இருக்கும் தொழிலாளர்களின் பிரச்சனைகளை நிவர்த்தி செய்ய கடந்த ஒரு வாரமாக முயற்சித்து வருவதாகவும், வேலை நிறுத்தத்தால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் மற்றும் குடும்பங்களுடன் உறுதியான வகையில் தங்களது உடனிருப்பை வெளிப்படுத்தி வருவதாகவும் தெரிவித்தார் கர்தினால் Paolo Lojudice
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தொழிலாளர் பிரச்சனைகளுக்குத் தனது ஆதரவையும் உடனிருப்பையும் வழங்கி ஊக்கப்படுத்தியதாகவும், வெளிநோக்கிச் செல்லும் திருஅவையாகக் குறிப்பாக துயரத்தில் இருக்கும் மக்களுக்கும், சமூக, பொருளாதார மற்றும் பலவீனமான நிலையில் உள்ளவர்களுக்கும் உதவும் திருஅவையாக இருக்கக் கேட்டுக்கொண்டதாகவும் எடுத்துரைத்தார் கர்தினால் Paolo Lojudice.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்