MAP

பூர்வீகக்குடியினருடன் திருத்தந்தை பூர்வீகக்குடியினருடன் திருத்தந்தை 

இயற்கையோடு இணைந்த பூர்வீகக்குடியினரின் ஞானத்தின் வாழ்வு

பூர்வீகக்குடியினரின் ஞானம் என்பது, நல்வாழ்வின் ஞானம். நன்முறையில் வாழ்வது என்பது எளிதானதல்ல, அது இயற்கையோடு இணக்கத்தில் வாழும் முறை

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

இயற்கையோடு இணக்கத்தில் வாழும் பூர்வீகக்குடியினரின் வாழ்வு, ஞானத்தின் வாழ்வு என ஆகஸ்ட் 9 வெள்ளிக்கிழமையன்று தன் டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆகஸ்ட் 9ஆம் தேதி உலகில் சிறப்பிக்கப்படும் உலக பூர்வீகக் குடியினர் தினம் குறித்து டுவிட்டர் செய்தியொன்றை வெளியிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பூர்வீகக்குடியினரின் ஞானம் என்பது, நல்வாழ்வின் ஞானம் எனவும், நன்முறையில் வாழ்வது என்பது எளிதானதல்ல, அது இயற்கையோடு இணக்கத்தில் வாழும் முறை எனவும் தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் வாழும் பழங்குடியினர் பற்றிய துல்லியமான கணக்கெடுப்புகள் இல்லையென்றாலும், ஏறக்குறைய 37 கோடி பழங்குடியின மக்கள் 90 நாடுகளில் வாழ்ந்து வருகின்றனர் என்ற புள்ளி விபரங்கள் கிடைக்கின்றன. இது உலக மக்கள்தொகையில் 6 விழுக்காட்டிற்கும் குறைவு எனினும் இவர்கள் ஏறக்குறைய 5 ஆயிரத்திற்கு அதிகமான கலாச்சாரங்களையும், 7 ஆயிரத்திற்கு மேற்பட மொழிகளையும் பேசுகின்றனர்.

தமிழகம் முழுவதும் முப்பத்து ஆறு(37?) பிரிவு பழங்குடியினர் எட்டு இலட்சம் பேர் வாழ்கின்றனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

09 ஆகஸ்ட் 2024, 16:27