MAP

ஆசிரியருடன் மாணவர்கள் ஆசிரியருடன் மாணவர்கள்   (Belgaimage)

திருஅவையில் யூபிலி ஆண்டு 2025 – மறைக்கல்வியாளர்களுக்கான யூபிலி

மறைக்கல்வியினை உலக மக்களுக்கு எடுத்துரைக்க தங்களையே அர்ப்பணிக்கும் மறைக்கல்வியாளர்களுக்கான யூபிலியானது செப்டம்பர் 26 முதல் 28 வரை திருஅவையில் சிறப்பிக்கப்பட இருக்கின்றது.

மெரினா ராஜ் – வத்திக்கான்

நற்செய்தியின் மகிழ்ச்சியை நமக்கு எடுத்துரைப்பது மறைக்கல்வி. நற்செய்தியின் மையமாக இருக்கும் இயேசுவை நேரடியாகச் சந்தித்து உரையாடவும், அவரோடு தனிப்பட்ட மற்றும் நெருங்கிய உறவை வளர்க்கவும், அவரின் சான்றுகளாக நாம் திகழவும், மறைக்கல்வி நமக்கு உதவுகின்றது. இத்தகைய மறைக்கல்வியினை உலக மக்களுக்கு எடுத்துரைக்க தங்களையே அர்ப்பணிக்கும் மறைக்கல்வியாளர்களுக்கான யூபிலியானது செப்டம்பர் 26 முதல் 28 வரை திருஅவையில் சிறப்பிக்கப்பட இருக்கின்றது.

செப்டம்பர் 26 வெள்ளிக்கிழமை மாலை உரோமில் உள்ள புனித யோவான் இலத்தாரன் பெருங்கோவில் வளாகத்தில் மறைக்கல்வி யாளர்களுக்கான யூபிலியில் பங்கேற்பவர்களை வரவேற்கும் நிகழ்வானது நடைபெறும். மறுநாள் அதாவது செப்டம்பர் 27, சனிக்கிழமை மாலை மொழிவாரியாக பிரிக்கப்பட்டு மறைக்கல்வி கூட்டமானது உரோமில் உள்ள பல்வேறு ஆலயங்களில் நடைபெற உள்ளது. செப்டம்பர் 28, ஞாயிறன்று காலை 10 மணியளவில் வத்திக்கான் வளாகத்தில் மறைக்கல்வியாளர்களுக்கான யூபிலி திருப்பலியானது திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் தலைமையில் நடைபெற உள்ளது.     

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

03 செப்டம்பர் 2025, 15:17