MAP

டாக்டர் இராதா கிருஷ்ணன் டாக்டர் இராதா கிருஷ்ணன் 

நேர்காணல் – அறிவொளியூட்டும் ஆசிரியர் தினம்

தியாகத்தின் சிகரங்களாகத் திகழும் ஆசிரியர்களை மெழுதிரிகள், ஏணிகள், கலங்கரை விளக்கங்கள் என்று பலவாறு கூறக் கேட்டிருப்போம். அறிமுகம் இல்லாத நம்மை, ஆளாக்கும் தன்மை கொண்டவர் ஆசிரியர். பாதி வழியில் நம்மை விட்டுச்செல்லாமல் நமது வாழ்க்கைக்கான வழியைக் காட்டிச்செல்வபர் அவர்.
நேர்காணல் - அருள்தந்தை ஞானப்பிரகாசம்

மெரினா ராஜ்  - வத்திக்கான்

இன்று நாம் தகுந்த கல்வியறிவோடு சரியானவற்றை சிந்தித்து தேர்ந்தெடுத்து செயல்படுத்துகின்றோம் எனில் அதற்கு முழுக்காரணம் நமது ஆசிரியர்கள். ஆசிரியர் என்பவர் வெறும் வார்த்தைகளை படித்து காட்டி, கல்வியைப் போதிப்பவர் மட்டும் அல்லர். நமது ஒழுக்கத்திற்கும் காரணமாகத் திகழ்பவர் அவர். இந்த உலகில் இருக்கும் எந்த ஓர் ஆசிரியரும் தனது மாணவரின் வளர்ச்சியினை கண்டு பொறாமை அடைவதே இல்லை. தியாகத்தின் சிகரங்களாகத் திகழும் ஆசிரியர்களை மெழுதிரிகள், ஏணிகள், கலங்கரை விளக்கங்கள் என்று பலவாறு கூறக் கேட்டிருப்போம். அறிமுகம் இல்லாத நம்மை, ஆளாக்கும் தன்மை கொண்டவர் ஆசிரியர். பாதி வழியில் நம்மை விட்டுச் செல்லாமல் நமது வாழ்க்கைக்கான வழியைக் காட்டிச் செல்வபர் அவர். இத்தகைய சிறப்புமிக்க ஆசிரியர்களைப் போற்றி மகிழ்வதற்காகவே இந்தியாவில் ஆசிரியர்கள் தினமானது ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 5ஆம் நாள் கொண்டாடப்படுகின்றது. எனவே இன்றைய நமது நேர்காணலில் ஆசிரியர்கள் தினம் பற்றியக் கருத்துக்களை நம்முடன் பகிர்ந்து கொள்பவர் அருள்தந்தை ஞானப்பிரகாசம்.

கோயம்புத்தூர் மறைமாவட்ட அருள்பணியாளரான தந்தை ஞானப்பிரகாசம் அவர்கள், பெங்களூருவில் உள்ள புனித பேதுரு திருப்பீடக் குருத்துவக் கல்லூரியில் தத்துவம் மற்றும் இறையியல் பயின்றவர். 2018ஆம் ஆண்டு குருவாக அருள்பொழிவு பெற்ற தந்தை அவர்கள், கடந்த 4 ஆண்டுகளாக கோவை மறைமாவட்ட இளைஞரணி இயக்குநராகப் பணியாற்றி வருகின்றார். தற்போது கோவை மறைமாவட்டம் தூய மிக்கேல் உயர்நிலைப் பள்ளியில் ஆங்கில மொழி முதுகலை ஆசிரியராகப் பணிபுரியும் தந்தை அவர்கள், இளைஞர்களை, சமூக, ஆன்மிக, மன, அறிவுசார், உளவியல் பரிமாணங்களை உள்ளடக்கிய முழுமையான புனிதத்தின் பாதையில் வழிநடத்துதலை தனது முதன்மையானப் பணியாக ஆற்றிவருகின்றார். நற்செய்தி அறிவிப்பில் ஆர்வம், மறைநூல்கள் மேல் அளவற்ற அன்பு, இளையோர் பணியில் மிகுந்த ஈடுபாடு, பண்ணிசைத்தும் பாட்டிசைத்தும் கடவுளைப் போற்றும் திறன் கொண்ட தந்தை அவர்களை ஆசிரியர் தினம் பற்றியக் கருத்துக்களை எடுத்துரைக்க எம் வத்திக்கான் வனொலி நேயர்கள் சார்பில் அன்புடன் அழைக்கின்றோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

05 செப்டம்பர் 2025, 08:31