MAP

போராட்டம் நடந்த இடத்தில் காவல் பணியாளர்கள் போராட்டம் நடந்த இடத்தில் காவல் பணியாளர்கள்  (ANSA)

இந்தோனேசியாவில் அமைதி, நீதிக்காக அழைப்பு விடுக்கும் ஆயர்கள்

உண்மை மற்றும் நீதிக்காகப் போராடி காயமடைந்தவர்கள், உயிர் இழந்த சகோதர சகோதரிகளுக்கு தங்களின் ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துள்ளனர் இந்தோனேசிய ஆயர்கள்.

மெரினா ராஜ் – வத்திக்கான்

இந்தோனேசிய ஆயர்களாகிய தாங்கள் அனைத்து வகையான வன்முறைகளையும் நிராகரிக்கிறோம் என்றும், ஆயர்கள் மற்றும் அதிகாரிகளை மட்டுமல்லாது, குடிமக்களையும் அமைதி, நீதி மற்றும் நாட்டின் ஜனநாயக மதிப்புகளுக்காக உழைக்குமாறு அழைக்கிறோம் என்று இந்தோனேசிய ஆயர் பேரவை சார்பில் அழைப்பு விடுத்துள்ளார் ஆயர் பிரான்சிஸ்குஸ் நிபா.

செப்டம்பர் 2, செவ்வாயன்று பீதேஸ் என்னும் கத்தோலிக்க செய்தி நிறுவனத்திற்கு இந்தோனேசியாவில் நிலவும் சூழல் குறித்து எடுத்துரைத்த நேர்காணலின்போது இவ்வாறு கூறினார் மகசார் மறைமாவட்ட ஆயர் பிரான்சிஸ்குஸ் நிபா. Franciskus Nipa,    

இந்தோனேசிய கத்தோலிக்க ஆயர்களாக, அமைதிக்கும் வன்முறையற்ற முறைகளைத் தேர்ந்தெடுப்பதற்கும் அழைப்பு விடுக்கும் செய்தியை மக்களிடையேப் பரப்பியுள்ளோம் என்று தெரிவித்துள்ள ஆயர் நிபா அவர்கள், தங்களின் நிலைப்பாடும் வேண்டுகோளும் எப்போதும் நல்லாட்சியில் கவனம் செலுத்துகின்றன, இதனால் அது உண்மையிலேயே பொது நன்மைக்கு சேவை செய்கிறது, என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

அர்த்தமற்ற மற்றும் அநீதியான வார்த்தைகள், செயல்கள் மற்றும் கொள்கைகளால் ஏற்பட்ட ஆழ்ந்த ஏமாற்றத்தை மக்களின் இத்தகைய ஆர்ப்பாட்டங்கள் பிரதிபலிக்கின்றன என்றும், உண்மை மற்றும் நீதிக்காகப் போராடி காயமடைந்த அல்லது உயிர் இழந்த சகோதர சகோதரிகளுக்கு தங்களின் ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துள்ளனர் இந்தோனேசிய ஆயர்கள்.

அரசியல் முடிவெடுப்பவர்கள் சமூகத்தில் சகவாழ்வை நிர்வகிக்கும் ஐந்து கொள்கைகளின் சாசனமான பஞ்சசிலாவின் கொள்கைகளை உள்ளடக்கியிருக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள ஆயர் நிபா அவர்கள், இந்தோனேசியாவில் உள்ள நிர்வாக, சட்டமன்ற மற்றும் நீதித்துறை அரசாங்கக் கிளைகள், மக்களின் விருப்பங்களைக் கவனமாகக் கேட்டு, நியாயமாகவும் பொறுப்புடனும் செயல்படவும், வெளிப்படையான மற்றும் பொறுப்புணர்வுள்ள நிர்வாகத்தை உறுதி செய்யவும்" அழைப்பு விடுத்துள்ளனர்.

பொருள் சேதத்தை ஏற்படுத்துகின்ற, தீங்கு விளைவிக்கின்ற மற்றும் சகோதரத்துவத்தையும் தேசிய ஒற்றுமையையும் தடுக்கின்ற குற்றச் செயல்களைத் தவிர்க்க அனைத்து குடிமக்களையும் வலியுறுத்தியுள்ள ஆயர்கள்,  பாதுகாப்புப் படைகள், அனைத்து குடிமக்களின் உண்மையான பாதுகாவலர்களாக இருக்க வேண்டும் என்பதையும் நினைவு கூர்ந்துள்ளனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

02 செப்டம்பர் 2025, 14:11