MAP

அரசர் சாலமோன் அரசர் சாலமோன் 

தடம் தந்த தகைமை – ஆண்டவரைப் போற்றிய அரசர் சாலமோன்

“இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் போற்றி! ஏனெனில், அவர் என் தந்தை தாவீதுக்குத் தம் வாயினால் வாக்களித்ததைத் தம் கையினால் நிறைவேற்றினார்.

மெரினா ராஜ் - வத்திக்கான்

சாலமோன், “ஆண்டவரே! ‘கரிய மேகத்திரளில் வாழ்வேன்’ என்று நீர் கூறியிருக்கிறீர். நானோ, உமக்கென மேன்மைமிகு இல்லத்தை, நீர் எந்நாளும் உறையும்படி ஒரு தலத்தை எழுப்பியுள்ளேன்” என்றார். பின்னர், அரசர் திரும்பி, இஸ்ரயேல் சபையார் அனைவருக்கும் ஆசிவழங்கினார். அப்போது அவர்கள் அனைவரும் நின்று கொண்டிருந்தனர். மேலும், அவர் உரைத்தது: “இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் போற்றி! ஏனெனில், அவர் என் தந்தை தாவீதுக்குத் தம் வாயினால் வாக்களித்ததைத் தம் கையினால் நிறைவேற்றினார்.

அவ்வாக்குறுதி, ‘நான் எகிப்து நாட்டிலிருந்து என் மக்களை அழைத்து வந்த நாள் முதல், என் பெயருக்கென ஒரு கோவிலை எழுப்புமாறு நான் இஸ்ரயேலின் வேறொரு குலத்து நகரையும் தேர்ந்துகொள்ளவில்லை. என் மக்கள் இஸ்ரயேலருக்குத் தலைவராக நான் எவரையும் தேர்ந்து கொள்ளவில்லை. ஆனால், இப்பொழுது எனது பெயர் விளங்கும் இடமாக எருசலேமையும், என் மக்கள் இஸ்ரயேலை ஆளத் தாவீதையும் தேர்ந்து கொண்டேன்’ என்பதாகும்.”

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

05 செப்டம்பர் 2025, 08:28