MAP

தென்  கொரியாவின் திருப்பலியில் பங்கேற்கும் இறைமக்கள் தென் கொரியாவின் திருப்பலியில் பங்கேற்கும் இறைமக்கள்   (ANSA)

கொரியத் திருஅவையின் உயிர் பாதுகாப்பு இயக்கம்

பராமரிப்பு என்பது ஒரு சமூகம் எவ்வளவு மனிதநேயமிக்கது என்பதை அளவிடும் அளவுகோல்; நோயாளிகளுக்கும் பலவீனருக்கும் பராமரிப்பு வழங்கத் தவறும் சமூகம், அவர்களை இறக்கத் திணிக்கும் மனிதநேயமற்ற சமூகம் - ஆயர் Ku Yoo-bi.

ஜெர்சிலின் டிக்ரோஸ் - வத்திக்கான்

உயிரை அதன் தொடக்கம் முதல், இயற்கையான முடிவு வரை பாதுகாப்பதே நமது அழைப்பு மற்றும் பணி என்பதையும், அதற்கான இறைவாக்கின குரலை எழுப்புவதையும் நோக்கமாக கொண்ட உயிர் பாதுகாப்பு இயக்கத்தை Jeju-வின் ஆயர் Moon Chang-woo மீண்டும் தொடங்க திட்டமிட்டுள்ளார்.

தேசிய அளவில் உருவாக்கப்பட்டுள்ள இந்த உயிர் பாதுகாப்பு இயக்கம், தற்போதுள்ள பல்வேறு முயற்சிகளை ஒரு வலையமைப்பாக உருவாக்கி ஒருங்கிணைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்றும் கொரிய ஆயர் பேரவையின் குடும்பம் மற்றும் வாழ்விற்கான துறையின் தலைவர் ஆயர்  Moon Chang-woo அவர்கள் தெரிவித்துள்ளார்.

இவ்வியக்கத்தில் "பிறக்காத உயிருக்கான திட்டம் எனப்படும், கருக்கலைப்பைத் தவிர்க்கும் வகையில், உதவி தேவைப்படும் தாய்மார்களுக்கு கத்தோலிக்க மருத்துவ சேவைகளை வழங்கும் திட்டம் அடங்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார் ஆயர் Moon Chang-woo. ஆகஸ்ட் 26, செவ்வாயன்று, அந்நாட்டின்  தேசிய நலவாழ்வுக் குழுவை, ஆயர் Moon Chang-woo அவர்கள், பல்வேறு கொரிய கத்தோலிக்க அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் சந்தித்த நிலையில், கொரிய ஜனநாயகக் கட்சியின் 11 உறுப்பினர்களால் முன்மொழியப்பட்ட தாய் சேய் நலவாழ்வுத் திட்டத்தில் திருத்தம் செய்வது குறித்து கவனம் செலுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கத்தோலிக்க திருஅவை பிரதிநிதிகள், முதலில் கத்தோலிக்கர்களிடமிருந்து தொடங்கி, கொரிய மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் தேவையை வலியுறுத்திய  சோல் மறைமாவட்ட உயிர் பாதுகாப்புக் குழுவின் பொதுச் செயலாளரான அருள்பணியாளர்.  Leo Oh Seok-jun அவர்கள், கருக்கலைப்புக்கு எப்போதும் எதிராகவே இருப்பதாகவும், ஆனால் சட்டத் திருத்தம் நடைமுறைக்கு வந்தால், பொது மக்களுக்கு முழுமையான தகவல்கள் அளித்து, பிரச்சினையை தெளிவாக விளக்குவது அவசியம் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

ஏனெனில் கருக்கலைப்பிற்கான முறையான  காரணங்களை தெரிவிக்கும் போதுதான், விசுவாசிகளும், நல்ல உள்ளம் கொண்ட மக்களும், மனித உயிரின் மாண்பை  மையமாகக் கொண்ட வாழ்க்கையின் மதிப்பை மறக்காமல் இருப்பார்கள் என்று கூறியுள்ளார் அருள்பணியாளர்.லியோ.

ஆகஸ்ட் 28, வியானன்று  நடைபெற்ற "இறுதி வாழ்க்கை பராமரிப்பு" (End-of-Life Care) தொடர்பான நிகழ்வில், பராமரிப்பு என்பது ஒரு சமூகம் எவ்வளவு மனிதநேயமிக்கது என்பதை அளவிடும் அளவுகோல் என்றும், நோயாளிகளுக்கும் பலவீனருக்கும் பராமரிப்பு வழங்கத் தவறும் சமூகம், அவர்களை இறக்கத் திணிக்கும் மனிதநேயமற்ற சமூகம் என்றும் சியோல் மறைமாவட்ட துணை  ஆயரும், உயிரியல் நெறிமுறை குழுத் தலைவருமான ஆயர் Ku Yoo-bi தெரிவித்துள்ளார்.

மேலும், ஒரு துன்புறும் நோயாளியை இரக்கம் என்ற பெயரில் தற்கொலை செய்ய உதவுவது தவறான செயல் என்று எச்சரித்துள்ளார் ஆயர் Ku Yoo-bi.  

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

29 ஆகஸ்ட் 2025, 13:42