MAP

கர்தினால் பியெர்பத்திஸ்தா பிட்சபாலா கர்தினால் பியெர்பத்திஸ்தா பிட்சபாலா  (AFP or licensors)

மோதல்களால் நரகத்தின் வாயிலாக மாறிய காசா!

காசாவில் நரகத்தின் வாயில்கள் ஏற்கனவே திறக்கப்பட்ட நிலையில் அங்குள்ள அருள்பணியாளர்களும், அருள்சகோதரிகளும் அவ்விடத்தை விட்டு வெளியேறாமல் துன்புறும் மக்களுக்கு ஆதரவாக இருப்பார்கள் - எருசலேமின் முதுபெரும் தந்தை பிட்சபாலா.

ஜெர்சிலின் டிக்ரோஸ் - வத்திக்கான்

காசாவில் நரகத்தின் வாயில்கள் ஏற்கனவே திறக்கப்பட்ட நிலையில்  அங்குள்ள அருள்பணியாளர்களும், அருள்சகோதரிகளும் அவ்விடத்தை விட்டு வெளியேறாமல் துன்புறும் மக்களுக்கு ஆதரவாக இருப்பார்கள்  என்று எருசலேமின் முதுபெரும் தந்தை கர்தினால்  பிட்சபாலா தெரிவித்துள்ளார்.

ஆகஸ்ட் 26 , செவ்வாயன்று, எருசலேமின் இலத்தின் வழிபாட்டுமுறை முதுபெரும் தந்தை கர்தினால் பியெர்பத்திஸ்தா பிட்சபாலா மற்றும் கிரேக்க ஆர்த்தடாக்ஸ் திருஅவைத் தலைவர் மூன்றாம் தியோபிலஸ் ஆகியோரால்   வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

காசாவில் இடம்பெற்றுவரும் தொடர் குண்டுவீச்சுகள் மற்றும் அதனால் ஏற்படும் உயிரிழப்புகளால்  இஸ்ரேலிய அரசு அறிவித்த ‘நரக வாசல்கள் திறக்கப்படும்’ என்ற வார்த்தைகள் இப்போது துயரமான உண்மையாகி வருகின்றன என்று அவர்கள் கவலை தெரிவித்துள்ளதாகவும் அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

போர் தொடங்கியதிலிருந்து, புனித  போர்பிரியஸ் கிரேக்க மரபுவழி வளாகமும், திருக்குடும்ப ஆலயத்திற்குச் சொந்தமான வளாகமும் முதியவர்கள், பெண்கள், குழந்தைகள் என நூற்றுக்கணக்கான பொதுமக்களுக்கு அடைக்கலம் தரும் இடமாக இருந்து வருகிறது என்று  தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேலிய இராணுவத்தால் தொடங்கப்பட்ட இராணுவ தரைவழித் தாக்குதல், பாலஸ்தீன மக்களை வடக்கு காசா பகுதி முழுவதிலும் இருந்து நாடு கடத்தும் குறிக்கோளைக் கொண்டுள்ளது என்று அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தெற்கு காசா பகுதியில் உள்ள ஒரே பொது நலவாழ்வு  மையமான நாசர் தி கான் யூனிஸ் மருத்துவமனையில் 6 பத்திரிகையாளர்கள், ஒரு மருத்துவர், செவிலியர்கள் குழு மற்றும்  பாதுகாப்பு தன்னார்வலர்கள் உள்பட மொத்தம் 20 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

27 ஆகஸ்ட் 2025, 16:03