MAP

யூபிலி ஆண்டு இலச்சினை யூபிலி ஆண்டு இலச்சினை  

திருஅவையில் யூபிலி ஆண்டு 2025 – செப்டம்பர் மாத யூபிலி கொண்டாட்டம்

ஆலோசனை வழங்குபவர்கள், நீதியை உருவாக்குபவர்கள் மற்றும் மறைக்கல்வியாளர்கள் என மூன்று நிலையினருக்கான யூபிலி நாள்கள் சிறப்பிக்கப்பட இருக்கின்றன.

மெரினா ராஜ் – வத்திக்கான்

வருகின்ற செப்டம்பர் மாதத்தில் திருஅவையில் மூன்று யூபிலிகள் அதாவது ஆலோசனை வழங்குபவர்கள், நீதியை உருவாக்குபவர்கள் மற்றும் மறைக்கல்வியாளர்கள் என் மூன்று நிலையினருக்கான யூபிலி நாள்கள் சிறப்பிக்கப்பட இருக்கின்றன.

செப்டம்பர் 15, தூய வியாகுல அன்னை திருவிழாவன்று ஆலோசனை வழங்குபவர்களுக்கான யூபிலியானது திருஅவையில் சிறப்பிக்கப்பட இருக்கின்றது. நோய், இறப்பு, வன்முறை மற்றும் முறைகேடுகள் காரணமாக வலி மற்றும் துன்பத்தை அனுபவிக்கும் அனைவரும், அவர்களது நண்பர்கள் மற்றும் குடும்பத்தாரும் பங்கேற்க அழைக்கப்படுகின்றனர். செப்டம்பர் 15, திங்களன்று உரோம் உள்ளூர் நேரம் மாலை 5 மணியளவில் தூய பவுல் பெருங்கோவிலில் நடைபெறும் இரவு திருவிழிப்பு செப வழிபாட்டுடன் இந்த யூபிலியானது சிறப்பிக்கப்பட இருக்கின்றது. கண்ணீரைத் துடைப்பதன் வழியாக எதிர்நோக்கை மீண்டும் தருதல் என்ற தலைப்பில் இந்த இரவு திருவிழிப்புசெப வழிபாடானது திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்களால் சிறப்பிக்கப்பட இருக்கின்றது.

செப்டம்பர் 20, சனிக்கிழமையன்று நீதியை ஏற்படுத்துபவர்களுக்கான யூபிலியானது சிறப்பிக்கப்பட உள்ளது. காலை 9 மணியளவில் ஒப்புரவு வழிபாடானது நீதித்துறையைச் சார்ந்தவர்களுக்கு தூய ஆறாம் பவுல் அரங்கத்தில் நடைபெறும். அதனைத் தொடர்ந்து 10.30 மணியளவில் கர்தினால் ரீனோ பிசிகெல்லா அவர்களின் தொடக்க உரையுடன் ஆரம்பமாகும் கூட்டத்தில், பேரருள்திரு, Juan Ignacio Arrieta அவர்கள் நீதியை உருவாக்குபவர், எதிர்நோக்கின் கருவிகள் என்ற தலைப்பில் உரையாற்ற உள்ளார். திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்களும் பங்கேற்கும் இக்கூட்டத்தில், நிறைவில் நீதித்துறை சார்ந்த அனைவருக்கும் தனது உரையினை ஆற்ற இருக்கின்றார் திருத்தந்தை.செப்டம்பர் 23 முதல் 28 திருஅவையில் மறைக்கல்வியாளர்களுக்கான யூபிலியானது சிறப்பிக்கப்பட இருக்கின்றது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

27 ஆகஸ்ட் 2025, 15:31