MAP

தூத்துக்குடி பனிமய அன்னை தேர் தூத்துக்குடி பனிமய அன்னை தேர்  

நேர்காணல் – தூய பனிமய அன்னை திருவிழா

"Signora Das Nevis" என்று போர்த்துகீசிய மொழியில் அழைக்கப்படும் அன்னை, தமிழில் "பனிமய அன்னை" என்று அழைக்கப்படுகின்றார்.
நேர்காணல் - அருள்தந்தை அலெக்சாண்டர் மரியதாஸ்

மெரினா ராஜ் – வத்திக்கான்

கடல் நீர் சூழ்ந்த தூத்துக்குடி மாநகரில் கரையோரமாக வீற்றிருந்து மக்களைக் காக்கும் அருள் கொண்டவர் அன்னை மரியா. பனிப்பொழிவு இல்லாத ஆகஸ்ட் மாதத்தில் பனியினைப் பொழிவித்து தனது உடன்இருப்பை உரோம் நகர மக்களுக்கு வெளிப்படுத்தியவர். அந்த அன்னையின் நினைவாக உலகெங்கும் பல திருத்தலங்கள் கட்டப்பட்டு அன்னையின் பக்தியை எடுத்துரைத்து வருகின்றன. பழைய ஏற்பாட்டில் கிதியோன் தன் போர்வை மட்டும் பனியில் நனைய வேண்டும் என்று வேண்டிய போதும், தன் போர்வை மட்டும் பனியில் நனையக் கூடாது என்று வேண்டியபோதும் இறைவன் அந்த அடையாளத்தைக் கொடுத்தது போல் பனி பெய்யாத இடத்திலும், காலத்திலும் அன்னை செய்த அற்புதத்தால் பனிமய மாதா என்று  மக்களால் அன்போடு அழைக்கப்படுகின்றார். "Signora Das Nevis" என்று போர்த்துகீசிய மொழியில் அழைக்கப்படும் அன்னை தமிழில் "பனிமய அன்னை" என்று அழைக்கப்படுகின்றார். வருகின்ற ஆகஸ்ட் 5 பனிமய அன்னையின் திருவிழாவைக் கொண்டாடும் வேளையில் அன்னையின் திருவிழா பற்றியக் கருத்துக்களை நம்முடன் பகிர்ந்து கொள்ள இருப்பவர் அருள்தந்தை அலெக்சாண்டர் மரியதாஸ். கோயம்புத்தூர் மறைமாவட்டத்தைச் சேர்ந்த அருள்பணி அலெக்சாண்டர் மரியதாஸ் அவர்கள், வத்திக்கானில் உள்ள திருவழிபாடு மற்றும் அருளடையாளங்கள் ஒழுங்குமுறைப் பேராயத்தில் பணியாற்றுகின்றார். தந்தை அவர்களை புனித பனிமய அன்னை திருவிழா பற்றியக் கருத்துக்களை எடுத்துரைக்க எம் வத்திக்கான் வானொலி நேயர்கள் சார்பில் அன்புடன் அழைக்கின்றோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

01 ஆகஸ்ட் 2025, 10:16