MAP

 Collemaggio அன்னை மரியா திருத்ததலம். Collemaggio அன்னை மரியா திருத்ததலம்.  

நம்மை உயர்ந்தவர்களாக மாற்றும் கடவுளின் அன்பு

புனித கதவு திருவழிபாடு செலஸ்டீன் பாவமன்னிப்பு வழிபாட்டு நாள்கள் ஆகியவை அறிவொளி பெற்ற மற்றும் அறிவொளி தரும் சமூகமாக நாம் இருக்க அழைக்கப்பட்டுள்ள மகிழ்வின் நாள்கள்.

மெரினா ராஜ் - வத்திக்கான்

கடவுளின் அன்பு மிகப் பெரியது, அவருக்கு எதிராக இருப்பவர்களைக் கூட அன்பு செய்யும் ஆற்றல் கொண்டது என்றும், கடவுளின் அன்பு அந்த அன்பில் நம்மைப் பெரியவர்களாக, உயர்ந்தவர்களாக மாற்றுகின்றது என்றும் கூறினார் பேராயர் Antonio D’Angelo.

ஆகஸ்டு 29, வெள்ளிக்கிழமை மாலை ஆக்குயிலாவில் உள்ள கோல்லேமாஜ்ஜோ அன்னை மரியா திருத்தலத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் 731-ஆவது ஆண்டு புனித கதவு திருவழிபாடு மற்றும் செலஸ்டீன் மன்னிப்பு வழிபாட்டின் இறுதிநாளை முன்னிட்டு நிறைவேற்றிய திருப்பலியின்போது இவ்வாறு எடுத்துரைத்தார் ஆக்குயிலா பெருநகர உயர்மறைமாவட்டப் பேராயர் Antonio D’Angelo.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் ஆக்குயிலா பெருநகரமானது “மன்னிப்பின் தலைநகரம்” என்று அழைக்கப்பட்டது என்பதை நினைவுகூர்ந்த பேராயர் ஆஜ்சலோ அவர்கள், இது ஓர் அழகான, ஆனால் சுமையான பட்டம் என்றும், ஏனெனில் நாம் மன்னிப்பை நமது வாழ்க்கையில் வாழ அழைக்கப்பட்டுள்ளோம் என்றும் எடுத்துரைத்தார்.

திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் வலியுறுத்துவது போல, “கடவுளின் எல்லையற்ற அன்பு, இறுதிவரை நம்மை அன்பு செய்யக்கூடியது” என்றும், அன்பு மற்றும் மன்னிப்பின் அடையாளத்தில் ஒரு அறிவொளி பெற்ற மற்றும் அறிவொளி தரும் சமூகமாக இருக்கவும் அத்தகைய சமூகத்தை வளர்க்க அழைக்கப்பட்ட ஆன்மிகமே செலஸ்டீன் மன்னிப்பு என்றும் தெரிவித்தார் பேராயர் ஆஞ்சலோ.

புனிதகதவு திருவழிபாடு செலஸ்டீன் பாவமன்னிப்பு நாள்கள் ஆகியவை அறிவொளி பெற்ற மற்றும் அறிவொளி தரும் சமூகமாக நாம் இருக்க அழைக்கப்பட்டுள்ள மகிழ்வின் நாள்கள் என்றும், நாம் ஒவ்வொருவரும் நற்கருணையின் இறைவாக்கினர்களாக இருக்க அழைக்கப்பட்டுள்ளோம் என்றும் கூறினார் பேராயர் ஆஞ்சலோ.

“நான் உன்னுடனே கூட இருக்கின்றேன்” என்று யாவே கடவுள் இறைவாக்கினர்களுக்குக் கூறிய வார்த்தைகள் இன்று நம்முடனும் அவர் இருக்கின்றார் என்பதை எடுத்துரைக்கின்றன என்று எடுத்துரைத்த பேராயர் ஆஞ்சலோ அவர்கள், கடவுளின் அருளால் உயிர்ப்பிக்கப்பட்ட நாம் அமைதியாக இருக்க முடியாது ஏனெனில் நம்மை ஆட்கொண்ட கடவுளின்  அன்பின் ஆற்றல் இரக்கமுள்ள உண்மையின் விவாதத்தில் நாம் பேசவும் செயல்படவும் நம்மைத் தூண்டுகின்றது என்றும் கூறினார்.

மன்னிப்பைக் கொண்டாடுவது என்பது கிறிஸ்துவின் இரக்கமுள்ள முகத்தை சந்திப்பது என்றும், தூய ஆவியால் மாற்றப்பட்ட வாழ்க்கைக்கு வழிவகுக்கின்ற, மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் உருவாக்குகின்ற "புதிய தன்மையைக்" கொண்டதாக உணர்வதுமாகும் என்றும் எடுத்துரைத்தார் பேராயர் ஆஞ்சலோ.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

30 ஆகஸ்ட் 2025, 12:57