விபத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் காரித்தாஸ்
மெரினா ராஜ் – வத்திக்கான்
பெட்ரோல் நிலைய விபத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரோம் மறைமாவட்ட கரித்தாஸ் மற்றும் தலத்திருஅவைகள் முன்னனியில் நின்று உதவி வருகின்றன என்றும், இடம்பெயர்ந்த ஏறக்குறைய 200 பேருக்கு உணவுகளையும் தங்குமிடங்களையும் அருகில் இருக்கும் தலத்திருஅவை சமூகங்கள் தங்கள் இடங்களை வழங்கி வருகின்றன என்றும் கூறினார் காரித்தாஸ் இயக்குனர் Giustino Trincia.
ஜூலை 4 வெள்ளிக்கிழமை காலை உரோம் மறைமாவட்டத்தின் மையத்தில் உள்ள Prenestino Labicano என்னும் பகுதியில் via dei Gordiani என்னும் இடத்தில் உள்ள பெட் ரோல் நிலையம் வெடித்து ஏற்படுத்திய பாதிப்புக்கள் குறித்து எடுத்துரைத்தபோது இவ்வாறு கூறினார் உரோம் மறைமாவட்ட காரித்தாஸ் அமைப்பின் இயக்குனர் Giustino Trincia.
உரோமில் ஏற்பட்ட பெட்ரோல் நிலைய விபத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தங்களது உடனிருப்பை வெளிப்படுத்தும் விதமாக உள்ளூர் அதிகாரிகள், தீயணைப்பு வீரர்கள், பாதுகாப்புப்படையினருடன் இணைந்து தலத்திருஅவை அருள்பணியாளர்கள் மற்றும் காரித்தாஸ் பணியாளர்கள் தங்களை உடனடியாக மீட்புப்பணியில் இணைத்துக்கொண்டனர் என்றும் தெரிவித்துள்ளார் காரித்தாஸ் இயக்குனர் Giustino Trincia
விபத்து ஏற்பட்ட பகுதிக்கு மிக அருகாமையில் இருக்கும் பங்குத்தளமான San Gerardo Maiella (via Romolo Balzani) பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான அடிப்படை உதவிகளை காரித்தாஸ் மற்றும் பிற தலத்திருஅவைகளுடன் இணைந்து வழங்கி வருகின்றனர் என்றும், குடியிருப்புப் பகுதிகளில் வாழ்ந்த மக்களுக்குத் தங்க இடமளித்து அவர்களை வரவேற்றதுடன் உணவு நீர் போன்ற பொருள்களையும் வழங்கி உதவி வருகின்றனர் என்றும் தெரிவித்தார் Trincia.
அருகில் இருக்கும் பிற பங்குத்தளங்களான Santi Marcellino e Pietro San Lauros, Santa Maria Madre della Misericordia, San Giuseppe Cafasso, போன்றவைகளும் மக்களுக்கான மீட்ப்புப்பணியில் தங்களை இணைத்துக்கொண்டுள்ளனர் என்றும், விபத்தினால் சேதமடைந்த குடியிருப்பாளர்களின் இல்லங்களை விரைவில் சரிசெய்து அவர்கள் அனைவரும் தத்தமது இல்லம் திரும்ப தொழில்நுட்ப வல்லுநர்களின் உதவியோடு இணைந்து செயலாற்றி வருகின்றனர் என்றும் தெரிவித்தார் Trincia.
விபத்து நடந்த இடத்திற்கு அருகில் 400 குழந்தைகளைக் கொண்ட பள்ளி ஒன்றும், கோடைகால விளையாட்டு மையம் ஒன்றும் கட்டுமானப்பணிகளைக் கொண்ட வணிக வளாகம் ஒன்றும் இருக்கின்றது இவைகள் விபத்தில் இருந்து அதிசயமாகக் காப்பாற்றப்பட்டுள்ளன என்றும் தெரிவித்தார் Trincia.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்