பராகுவேயில் புலம்பெயர்ந்தோருக்கான மேய்ப்புப் பணி உதவி மையம்!
ஜெர்சிலின் டிக்ரோஸ் - வத்திக்கான்
புலம்பெயர்ந்தோர் எதிர்கொள்கின்ற சவால்களுக்குப் பதிலளிக்கும் வகையில் பராகுவேயில் உள்ள கத்தோலிக்கத் தலத்திருஅவை அசுன்சியோனில் புலம்பெயர்ந்தோருக்கான மேய்ப்புப் பணி உதவி மையம் ஒன்றைத் திறந்துள்ளது.
புலம்பெயர்ந்தோரை ஆதரிப்பதற்கான முன்னாள் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் 4 வழிகாட்டும் கொள்கைகளான வரவேற்பு, பாதுகாப்பு, ஊக்குவித்தல் மற்றும் ஒருங்கிணைத்தலை உள்ளடக்கிய இம்மேய்ப்புப் பணி உதவி மையம் கர்தினால் Adalberto Martínez Flores அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.
இந்த மையம் புலம்பெர்ந்தோர் மற்றும் இடம்பெயர்ந்தோரின் குடும்பங்களுக்குத் தங்குமிடம், ஆதரவு மற்றும் வழிகாட்டுதலை வழங்குகிறது.
மேலும், வழக்கறிஞர்கள், மருத்துவர்கள், சமூகவியலாளர்கள் மற்றும் தன்னார்வலர்களுக்கு இடம்பெயர்வு தொடர்பான பிரச்சனைகள் குறித்த பட்டறைகள், ஆன்மிக வழிகாட்டுதல் மற்றும் கல்வியை வழங்கும் பயிற்சி மற்றும் விழிப்புணர்வு மையமாகவும் இது செயல்படுகிறது.
பராகுவே ஆயர் பேரவை அசுன்சியோன் மறைமாவட்டம், ஸ்கலாப்ரினி அமைப்பு ஆகியவற்றின் ஆதரவுடன் செயல்பட்டு வரும் இந்த மேய்ப்புப் பணி உதவி மையம், புலம்பெயர்ந்தோரின் குறிப்பாக, பாதுகாப்பு இல்லாதோரின் மாண்பு மற்றும் உரிமைகளைப் பாதுகாப்பதில் திருஅவையின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பை எடுத்துக்காட்டுகிறது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்