MAP

மேற்கு கரையில் இஸ்ரேல் இராணுவத்தால் தாக்கப்பட்டுள்ள பாலஸ்தீனக் குடியிருப்புகள் மேற்கு கரையில் இஸ்ரேல் இராணுவத்தால் தாக்கப்பட்டுள்ள பாலஸ்தீனக் குடியிருப்புகள்  

மேற்கு கரையில் தைபே கிறிஸ்தவர்களைத் தாக்கும் யூதக் குடியேறிகள்!

பாலஸ்தீனத்தில் உள்ள தைபே ஓர் கிறிஸ்தவ கிராமம் மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கிறிஸ்தவத் தளம். இங்குப் பாலஸ்தீனத்தில் உள்ள யூதர்கள் குடியேறி கிறிஸ்தவ மக்களுடன் தொடர் வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர்.

சுஜிதா சுடர்விழி -வத்திக்கான்

மேற்குக் கரையில் வாழும் கிறிஸ்தவர்களை பாலஸ்தீனத்தின் யூதக் குடியேறிகள் தாக்கி அவர்களின் சொத்துக்களுக்குப் பெரும் சேதம் விளைவிப்பதாக, இலத்தீன், கிரேக்க ஆர்த்தடாக்ஸ் மற்றும் மெல்கி தேவாலயங்களின் மூன்று திருஅவை அருள்பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பாலஸ்தீனத்தில் உள்ள தைபே ஓர் கிறிஸ்தவக் கிராமம் மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கிறிஸ்தவத் தளம் இங்குப் பாலஸ்தீனத்தில் உள்ள யூதர்கள் குடியேறி கிறிஸ்தவ மக்களுடன் தொடர் வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கிடையில் கிறிஸ்தவக் குடியிருப்பாளர்களுக்குச் சொந்தமான ஆலிவ் தோப்புகள் மற்றும் விவசாய நிலங்கள் மீது அழிவை ஏற்படுத்துதல் தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும் இது குறித்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அல்-காதர் பண்டைய தேவாலயம் மற்றும் பைசண்டைன் கிறிஸ்தவ கல்லறை அருகே யூதக் குடியேறிகள் அண்மையில் தீ வைத்ததாகவும், இஸ்ரேலிய வீரர்களின் செயலற்ற கண்காணிப்பின் கீழ் நிகழும் இந்த வன்முறையை நிறுத்துமாறும் இந்நகரதிலுள்ள அருள்பணியாளர்கள் இஸ்ரேலிய அதிகாரிகளை வலியுறுத்தி வருவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

மேலும் அங்குக் கிறிஸ்தவர்களுக்கு எதிராக இடம்பெற்று வரும் பிரச்சனைகளை  களப்பணிகளின் வழியாக ஆய்வு செய்து ஆவணப்படுத்த வேண்டும் என்று உலக மற்றும் திருஅவைக் குழுமங்களுக்கு அழைப்பொன்றையும் விடுத்துள்ளனர்.

அவ்வாறே பாலஸ்தீன கிராமங்களிலும் இதேபோன்ற தாக்குதல்களை யூதக் குடியேறிகள்  நடத்தியுள்ளனர் என்றும், இதில் தீ வைப்பு, உள்கட்டமைப்பை அழித்தல் மற்றும் கொலைகள் உள்ளிட்டவை அடங்கும் எனவும் அச்செய்திக் குறிப்புத் தெரிவிக்கின்றது.

மேலும் காசா மீது உலகளாவிய கவனம் செலுத்தப்படும் அதேவேளையில், உலகின் பழமையான கிறிஸ்தவ அமைப்புக்கள் ஒன்றின்மீதான அவலநிலை கவனிக்கப்படாமல் போய்விட கூடிய நிலை இருப்பதாகவும் அங்குள்ள கிறிஸ்தவக் குடியிருப்பாளர்கள் அஞ்சுகின்றனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

10 ஜூலை 2025, 10:26