நேர்காணல் – இணைய வழியில் மறைப்பணியாற்றுவோர்க்கான யூபிலி – 2
மெரினா ராஜ் – வத்திக்கான்
இணையதள உதவியுடன் சமூகத்தொடர்பு சாதங்களைப் பயன்படுத்தி கத்தோலிக்க சிந்தனைகளையும் தகவல்களையும் உணர்வுகளையும் மக்களிடத்தில் பரப்புபவர்கள். மேலும் சமூக வலைத்தளங்களில் விவாதங்களை நடத்துதல், இணையவழி வகுப்புகள் மற்றும் கூட்டங்களை நடத்துதல் வழியாக மறைப்பணியாற்றுபவர்கள். புலனம், முகப்பு புத்தகம், குறுஞ்செய்தி (வாட்சப்,ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம்) போன்ற சமூக வலைத்தளங்களில் கத்தோலிக்க மதத்தைப் பற்றிய செய்திகளைப் பகிர்தல் மற்றும் விவாதங்களை நடத்துதல், திருவழிபாட்டு நிகழ்வுகளுக்கு உதவியான செபங்கள், மறையுரைகள் மன்றாட்டுக்கள், காணொளிகள் மற்றும் ஒலிப்பதிவுகளைப் பதிவேற்றம் செய்து உதவுதல் இவர்களின் முக்கியமான பணியாக இருக்கின்றது.
நாம் வாழ்கின்ற இந்த மின்னணு உலகில் எதிர்நோக்கின் மறைப்பணியாளர்களாக நாம் இருப்பது என்பது, உலகின் ஒவ்வொரு மூலைக்கும் நற்செய்தியைக் கொண்டு வருவதற்கான கிறிஸ்துவின் அழைப்பை ஏற்றுக்கொள்வதாகும். இது நம்பிக்கை மற்றும் நற்செய்தியின் ஒளியைப் பரப்புவதையும், நம்பிக்கை மற்றும் அன்பின் செய்திகளால் வாழ்க்கையை மாற்றுவதையும் உள்ளடக்கியது. இத்தகைய வழியில் கத்தோலிக்க தாக்கத்தை மக்கள் மனதில் ஏற்படுத்தும் டிஜிட்டல் மறைப்பணியாளர்களுக்கான யூபிலியானது சிறப்பிக்கபப்டுகின்றது. ஊடகம் வழியாக மறைப்பணியாற்ற அழைக்கப்பட்டவர்களைக் கொண்டாடவும், பயிற்சி அளிக்கவும், ஊக்குவிக்கவும் நமது முயற்சிகளை இந்நாளில் நாம் ஒன்றிணைப்போம். சமூக வலைப்பின்னல்கள், வலைப்பதிவுகள், சேனல்கள் மற்றும் செயலிகளில் நற்செய்தியின் செய்தியைப் பகிர்ந்து கொள்பவர்கள் அனைவரும் தங்களது அனுபவங்களைப் பரிமாறிக் கொள்ளவும், நமது பொதுவான பணியை வலுப்படுத்தவும் ஒரு வாய்ப்பாக இந்த யூபிலியானது கொண்டாடப்படுகின்றது.
சலேசிய சபை அருள்பணியாளரான எல் ஆரோக்கியதாஸ் அவர்களின் கடந்த வார நேர்காணலின் தொடர்ச்சியை இன்றைய நம் நிகழ்வில் காணலாம்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்