MAP

துள்ளிக்குதிக்கும் இளைஞர்கள் துள்ளிக்குதிக்கும் இளைஞர்கள் 

நேர்காணல் - கிறிஸ்து வாழ்கின்றார் - இளையோர்க்கானத் திருத்தூது அறிவுரை மடல்

சமூகத்தில் பரவிவரும் அழுக்குகளை அகற்றும் ஆற்றல் பெற்றவர்கள் இளைஞர்கள். இத்தகைய இளைஞர்களுக்கான யூபிலியை திருஅவையானது வருகின்ற ஜூலை மாதம் 28 முதல் ஆகஸ்ட் மாதம் 3 வரை சிறப்பிக்க இருக்கின்றது.
நேர்காணல் - அருள்முனைவர் செ. மைக்கில் ராஜ்

மெரினா ராஜ் – வத்திக்கான்

இளைஞர்கள் திருஅவைக்கு மிகவும் தேவையானவர்கள், கிறிஸ்துவைப் பின்தொடர அழைக்கப்படுபவர்கள். திருஅவையின் பணியாளர்களாக மாறவும், தங்களைத் தாங்களே அறிந்துகொள்ளவும் இளைஞர்கள் கடவுளால் அழைக்கப்படுகின்றார்கள். சமூகத்தில் பரவிவரும் அழுக்குகளை அகற்றும் ஆற்றல் பெற்றவர்கள் இளைஞர்கள். இத்தகைய இளைஞர்களுக்கான யூபிலியை திருஅவையானது வருகின்ற ஜூலை மாதம் 28 முதல் ஆகஸ்ட் மாதம் 3 வரை சிறப்பிக்க இருக்கின்றது.

எனவே இன்றைய நமது நேர்காணலில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் எழுதி வெளியிட்ட கிறிஸ்து வாழ்கின்றார் என்ற இளைஞர்களுக்கான திருத்தூது அறிவுரை மடல் குறித்த கருத்துக்களைக் குறித்து நம்மோடு பகிர்ந்துகொள்ள இருப்பவர் அருள்பணி முனைவர் செ. மைக்கில் ராஜ். சிவகங்கை மறைமாவட்டத்தைச் சேர்ந்த அருள்பணி முனைவர் செ. மைக்கில் ராஜ் அவர்கள், திருச்சி புனித பவுல் குருத்துவக் கல்லூரியில் விவிலியப் பேராசிரியராக 7 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். கடந்த ஆண்டு உரோமையில் உருவாக்குநர் பயிற்சியினைப் பெற்ற தந்தை அவர்கள் தற்போது திண்டிவனத்தில் உள்ள தமிழ்நாடு ஆயர்பேரவை விவிலியப்பணிக்குழுப் பொதுச்செயலராகப் பணியாற்றி வருகின்றார். எதிர்நோக்கின் திருப்பயணிகள் என்ற புத்தகத்தின் ஆசிரியரான தந்தை மைக்கில் ராஜ் அவர்களை கிறிஸ்து வாழ்கின்றார் என்ற திருத்தூது அறிவுரைமடல் குறித்தக் கருத்துக்களை எடுத்துரைக்க எம் வத்திக்கான் வானொலி நேயர்கள் சார்பில் அன்புடன் அழைக்கின்றோம். 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

04 ஜூலை 2025, 10:28