MAP

 இந்தோனேசிய தலத்திருஅவை ஆயர்கள் இந்தோனேசிய தலத்திருஅவை ஆயர்கள்  

இந்தோனேசிய தலத்திருஅவை புலம்பெயர்ந்தோருக்கு நிலையான மேய்ப்புப்பணி

இந்தோனேசியாவில் கிழக்கு நுசா தெங்காராவை ஒன்றாகக் கட்டியெழுப்புவோம், இளைஞர்களுக்கு வீட்டில் சிறந்த வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்கான பொறுப்பைப் பகிர்ந்து கொள்வோம் – ஆயர் குங்.

சுஜிதா சுடர்விழி - வத்திக்கான்

மனித வர்த்தகம், தொழிலாளர் சுரண்டல், பொருளாதார பாதிப்பு ஆகியவற்றால் அடிக்கடி பாதிக்கப்படும் புலம்பெயர்ந்தோர் மற்றும் அவர்களது குடும்பங்களை ஆதரிக்க,  உறுதியான நடவடிக்கைகளை மேய்ப்புப்பணிக்குழு எடுக்க வேண்டும் என்றும், இடம்பெயர்வு பற்றி உரையாடுவது என்பது ஒரு புதிய தலைப்பு அல்ல என்றும் எடுத்துரைத்தார் ஆயர் பிரான்சிஸ்கஸ் கோபோங் குங்.   

ஜூலை 1, செவ்வாய்க்கிழமை முதல் ஆரம்பமாகிய இந்தோனேசியாவின் நுசா தெங்காரா தலத்திருஅவையின் 12வது மேய்ப்புப் பேரவை நிகழ்விற்கு தலைமையேற்று வழிநடத்தியபோது இவ்வாறு தெரிவித்தார் லாரன்டுகாவின் ஆயர் பிரான்சிஸ்கஸ் கோபோங் குங்.

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களைப் பராமரிப்பதற்கான  அழைப்போடு தொடங்கிய இக்கூட்டத்தில், கிழக்கு புளோரஸில் உள்ள லாரன்டுகா மறைமாவட்டத்தில், நுசா தெங்காரா பகுதி முழுவதிலுமிருந்து ஒன்பது ஆயர்கள் கலந்துகொண்டனர்.

மேலும் இதில் இந்தோனேசியா மற்றும் மலேசியாவில் உள்ள மறைமாவட்டங்களின் பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள், புலம்பெயர்ந்தோர் பாதுகாப்பு நிறுவனங்கள், சட்ட அமலாக்க நிறுவனங்கள், பல்வேறு துறவற சபைகளின் உறுப்பினர்கள் ஆகியோர் ஒருமித்து கூடியுள்ளதாக ஆசிய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

மனித வர்த்தகம், தொழிலாளர் சுரண்டல், பொருளாதார பாதிப்பு ஆகியவற்றால் அடிக்கடி பாதிக்கப்படும் புலம்பெயர்ந்தோர் மற்றும் அவர்களது குடும்பங்களை ஆதரிக்க,  உறுதியான நடவடிக்கைகளை மேய்ப்புப்பணிக்குழு எடுக்க வேண்டும் என்று  தலத்திருஅவையை வலியுறுத்தினார் இந்நிகழ்விற்கு தலைமையேற்று வழிநடத்திய லாரன்டுகாவின் ஆயர் பிரான்சிஸ்கஸ் கோபோங் குங்.

இடம்பெயர்வு எங்களுக்கு ஒரு புதிய தலைப்பு அல்ல என்றும், கிழக்கு நுசா தெங்காரா (NTT) ஆளுநர் மெல்கி லகா லீனா மற்றும் உள்ளூர் அரசுத்தலைவர்கள் தலத்திருஅவையுடன் தொடர்ந்து ஒத்துழைப்பதற்காக தனது நன்றியினையும் தெரிவித்தார் ஆயர் குங்.

மேலும், பாதுகாப்பற்ற இடம்பெயர்வுக்கு வழிவகுக்கும் உந்துதல் காரணிகள், உள்ளூர் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்க பங்கேற்பாளர்களுக்கு அழைப்பு, மறைமாவட்டங்களுக்கு இடையே சிறந்த நடைமுறைகளை எவ்வாறு பகிர்ந்து கொள்வது, மேய்ப்புப்பணி உத்திகளை சிறப்பாக உருவாக்குவது, நுசா தெங்காரா மற்றும் அதற்கு அப்பால் உள்ள புலம்பெயர்ந்தோருக்கு திருஅவையின் தொடர்ச்சியான மற்றும் பயனுள்ள துணையை உறுதி செய்வதற்கான கொள்கைகளை உருவாக்குவதில் கவனம் செலுத்துதல் ஆகியவை குறித்தும் பகிர்ந்துகொண்டார் ஆயர் குங்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

03 ஜூலை 2025, 14:59