MAP

இந்திய கிறிஸ்தவர்கள் பேரணி இந்திய கிறிஸ்தவர்கள் பேரணி  (AFP or licensors)

ஒடிசாவில் கிறிஸ்தவர்களுக்கு எதிரான வன்முறை குறித்து நடவடிக்கை

கிழக்கு ஒடிசா மாநிலத்தில் அதிகரித்து வரும் கிறிஸ்தவர்களுக்கு எதிரான தாக்குதல்கள் குறித்த விவரங்களை, மத சிறுபான்மையினரின் நலன்களைப் பாதுகாக்கும் இந்தியாவின் கூட்டாட்சி நிறுவனம் அறிக்கையை கோரியுள்ளது. - யூகான் செய்தி நிறுவனம்

சுஜிதா சுடர்விழி -வத்திக்கான்

ஒடிசாவின் மல்கன்கிரி மாவட்டத்தில் உள்ள தொலைதூர கோட்டமடேரு கிராமத்தில் ஜூன் 21-ஆம் தேதி சனிக்கிழமை  அன்று ஏறக்குறைய 400 பேர் கொண்ட கூட்டம் கிறிஸ்தவர்களுக்கு எதிராக ஒருங்கிணைந்த தாக்குதலை நடத்தியதாக யூகான் செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது. 

இந்தக் கிராமத்தில் ஏறக்குறைய 70 வீடுகள் உள்ளதாகவும்,  அவற்றில் 11 வீடுகள் மட்டுமே கிறிஸ்தவர்கள் எனவும், வன்முறை தாக்குதலில் 30க்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் காயமடைந்தாகவும், அவர்களில் 20 பேர் படுகாயமடைந்தாகவும் ஜூன் 27-ஆம் தேதி  அன்று தேசிய சிறுபான்மையினர் ஆணைய (NCM) தலைவரும், உரிமை ஆர்வலருமான ஏ.சி. மைக்கேல் மாநிலத்தின் தலைமைச் செயலருக்கு ஒரு கடிதம் அனுப்பியது குறிப்பிடத்தக்கது.

இந்த விவகாரத்தைக் கையிலெடுத்துள்ள  தேசிய சிறுபான்மையினர் ஆணையம், இதனை  விசாரித்து 21 நாட்களுக்குள் ஆணையத்திற்கு அறிக்கையை அனுப்ப வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளாதாக  யூகான் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும், காயமடைந்தவர்கள் மாவட்ட மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதாகவும், மற்றவர்கள் அருகிலுள்ள ஒரு தேவாலயத்தில் தஞ்சம் புகுந்ததாகவும், இது தற்போது தற்காலிக தங்குமிடமாக செயல்படுவதால் பாதிக்கப்பட்டவர்களுக்கு போதுமான இழப்பீடு மற்றும் மறுவாழ்வு வழங்கப்பட வேண்டும் என்றும்  மைக்கேல் கோரியுள்ளதாக குறிப்பிட்டுள்ளது அச்செய்தி நிறுவனம்.

இதற்கிடையில், ஒடிசாவில் கிறிஸ்தவர்கள் குறிவைத்து தாக்கப்படுகிறார்கள் என்றும், அவர்களைப் பாதுகாக்க அரசு தவறிவிட்டது என்றும் டெல்லி மாநில சிறுபான்மை ஆணையத்தின் முன்னாள் உறுப்பினர் மைக்கேல் கூறியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், தனது புகாருக்கு ஆணையத்திலிருந்து  விரைவான பதில் வந்ததை குறித்து மகிழ்ச்சியடைவதாக ஜூலை முதல் தேதி மைக்கேல், யுகான் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

02 ஜூலை 2025, 17:43