மேற்கு கரையில் நம்பிக்கையின் சின்னமாகத் திகழும் தைபே கிராமம்!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
மேற்கு கரையில் உள்ள ஒரு கிறிஸ்தவ கிராமமான தைபேயின் குடியிருப்பாளர்கள் அண்மையில் தங்கள் நிலத்தையும் வீடுகளையும் அபகரிக்க முயற்சிக்கும் இஸ்ரேலிய குடியேறிகளின் வன்முறைத் தாக்குதல்களை எதிர்கொண்ட வேளை, ஜூலை 14, இத்திங்களன்று, அங்குச் சென்ற கிறிஸ்தவத் தலைவர்களும் தூதரக அதிகாரிகளும் தங்களின் ஆதரவையும் ஒன்றிப்பையும் அவர்களுக்கு வெளிப்படுத்தியுள்ளனர்.
பல்வேறு கிறிஸ்தவப் பிரிவுகளைச் சேர்ந்த 1,500 குடியிருப்பாளர்களைக் கொண்ட தைபே கிராமம், அச்சம், தாக்குதல்கள், காயங்கள் மற்றும் அழிவுகளுக்கு மத்தியிலும் ஒற்றுமையுடன் உள்ளது என்றும், மக்கள் வீடுகள், நிலங்கள், ஏன் உயிர்களைக்கூட இழந்துள்ளனர் என்றாலும், அக்கிராமம் பழிவாங்கும் நோக்கத்தை விடுத்து, அமைதி மற்றும் மனித மாண்பிற்காகத் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது என்றும், அதுகுறித்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காசா முதல் பெத்லகேம் வரை புனித பூமி முழுவதும் வன்முறை அதிகரித்து வருகிறது என்றும், அங்குள்ள குடியேறிகள் நிகழ்ந்தும் வன்முறை மற்றும் கடுமையான கட்டுப்பாடுகள் காரணமாக கிறிஸ்தவர்கள் வெளியேற வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர் என்றும் தெரிவிக்கும் அச்செய்திக் குறிப்பு, இருப்பினும், இது ஒரு மதப் போர் அல்ல, என்றாலும், இது அப்பாவி உயிர்களைப் பாதுகாப்பது பற்றியது என்றும் உரைக்கிறது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்