குரோயேஷியாவில் 125ஆம் ஆண்டின் திருஇருதய அர்ப்பணிப்பு விழா
சுஜிதா சுடர்விழி - வத்திக்கான்
குரோயேஷிய ஆயர்கள் ஜூன் 27ஆம் ஆண்டு வெள்ளிக்கிழமை அன்று தங்கள் நாட்டை இயேசுவின் தூய இருதயத்திற்கு அர்ப்பணித்ததாகவும், இதில் 1,60,000 இளம் குரோயேஷியர்கள் கலந்துகொண்டு புனித உறுதிமொழியை மேற்கொண்டதாகவும், இது விழாவின் 125வது ஆண்டு நிறைவைக் குறிப்பதாகவும், மேலும் அன்று உள்ளூர் நேரப்படி மாலை 7 மணிக்கு குரோஷியா முழுவதும் உள்ள எல்லா ஆலயங்களிலும் அர்ப்பணிப்பு விழா மற்றும் நற்கருணை கொண்டாட்டங்கள் தொடங்குவதற்கு முன்பு ஐந்து நிமிடங்கள் ஆலய மணிகள் ஒலிப்பதன் மூலம் செப வழிபாடு தொடங்கப்பட்டது எனவும் CNN செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
நவம்பர் 2024ஆம் ஆண்டு குரோயேஷிய ஆயர்கள் தங்கள் 69வது மாநாட்டில் இந்த வரலாற்று சிறப்புமிக்க அர்ப்பணிப்பைப் புதுப்பிப்பதற்கான முடிவு எடுக்கப்பட்டதாகவும், எதிர்பாராத விதமாக இது திருத்தந்தை பிரான்சிஸ் அறிவித்த 2025 ஆம் ஆண்டு யூபிலி ஆண்டோடு தொடர்புடையதாக இருப்பதால் இது அர்த்தமுள்ள அர்ப்பணிப்பு விழா என்றும் சுட்டிக்காட்டியுள்ளது CNN செய்தி நிறுவனம்.
இதைத் தொடர்ந்து, ஜூன் 28 சனிக்கிழமை, உட்பினாவில் உள்ள குரோயேஷிய முதல் தூய மறைசாட்சிகளின் தேவாலயத்தில் குரோயேஷியாவின் இளைஞர்கள் மரியாளின் மாசற்ற இருதயத்திற்கு தங்களை அர்ப்பணித்ததாகவும் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
குரோயேஷியாவிற்கான திருப்பீடத் தூதுவர், பேராயர் ஜியோர்ஜியோ லிங்குவா, பிற்பகல் 3 மணிக்கு நடைபெற்ற விழாவிற்கு தலைமை தாங்கியதாகவும், லாடாடோ ஊடகம் மூலம் இது நேரடியாக ஒளிபரப்பப்பட்டதாகவும் கூறியுள்ளது அச்செய்தி நிறுவனம்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்