தடம் தந்த தகைமை : அரசரின் ஆணவத்திற்கு கடவுள் அருளிய பரிசு!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
அக்காலத்தில் தானியேல் உரைத்தவாறே அரசன் நெபுகத்னேசருக்கு அனைத்தும் நேர்ந்தது. ஓராண்டு சென்றபின், ஒருநாள் அரசன் பாபிலோன் அரண்மனையின் மேல் மாடத்தில் உலவிக்கொண்டிருந்தான். அப்பொழுது அவன், “என்வலிமையின் ஆற்றலால் அரசன் வாழும் மாளிகையாகவும், எனது மாட்சியும் மகுடமாகவும் நான் கட்டியெழுப்பியதன்றோ இந்த மாபெரும் பாபிலோன்!” என்றான். இந்தச் சொற்களை அரசன் சொல்லி முடிக்கும் முன்பே, வானத்திலிருந்து ஒரு குரலொலிகேட்டது: “நெபுகத்னேசர் அரசனே! உனக்கே இந்தச் சொல்! உன்னுடைய அரசு உன்னிடமிருந்து அகன்று விட்டது. மனித சமுதாயத்தினின்று நீ விரட்டப்படுவாய். காட்டு விலங்குகளோடு வாழ்ந்து, மாடுபோலப் புல்லை மேய்வாய்; மனிதர்களின் அரசை உன்னதரே ஆள்கின்றார் என்றும், தாம் விரும்பியவர்க்கே அதனைத் தந்தருள்வார் என்றும் நீ உணர்ந்து கொள்வதற்குள் ஏழு ஆண்டுகள் உன்னைக் கடந்து செல்லும்.” உடனே இந்த வாக்கு நெபுகத்னேசரிடம் நிறைவேறிற்று. மனித சமுதாயத்தினின்று அவன் விரட்டப்பட்டான். மாட்டைப்போலப் புல்லை மேய்ந்தான்; தலைமயிர் கழுகுகளின் இறகு போலவும், அவனுடைய நகங்கள் பறவைகளின் நகங்கள் போலவும் வளரத் தொடங்கும்வரை அவனது உடல் வானத்தின் பனியினால் நனைந்தது.
குறித்த காலம் கடந்தபின், அரசர் நெபுகத்னேசர் தனது கண்களை வானத்திற்கு உயர்த்தவே, அவரது பகுத்தறிவு அவருக்கு மறுபடியும் அருளப்பட்டது. அவரோ உன்னதரை வாழ்த்தி, என்றுமுள கடவுளைப் புகழ்ந்து போற்றினார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்