MAP

காட்டுக்கு விரட்டப்பட்ட மன்னர் செபுகத்னேசர் காட்டுக்கு விரட்டப்பட்ட மன்னர் செபுகத்னேசர்  

தடம் தந்த தகைமை : மன்னருக்கு தானியேல் வழங்கிய அறிவுரை!

“அரசரே, நல்லறத்தைப் பேணித் தீச்செயல்களை நீக்குக! ஒடுக்கப்பட்டோர்க்கு இரக்கம் காட்டி உம் பாவக்கறைகளைப் போக்கிக்கொள்க!”

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

அந்நாள்களில் தானியேல் இரண்டாம் கனவு குறித்து மேலும் அரசரிடம் விளக்கிக் கூறியது: "அரசரே! காவலராகிய தூயவர் ஒருவர் வானத்திலிருந்து இறங்கி வந்ததை நீர் கண்டீர் அல்லவா! அவர், ‘இந்த மரத்தை வெட்டி அழித்துப்போடுங்கள்; ஆனால் வேர்கள் நிறைந்த அடிமரத்தை அப்படியே நிலத்தில் விட்டுவையுங்கள்; இரும்பாலும் வெண்கலத்தாலுமான சங்கிலியால் அது கட்டப்பட்டு வயல்வெளிப் பசும்புல் நடுவில் கிடக்கட்டும்; வானத்தின் பனியால் அவன் நனையட்டும். ஏழு ஆண்டுகள் அவனைக் கடந்து செல்லும்வரை அவன் விலங்கோடு விலங்காய்த் திரிவான் என்று சொன்னதையும் கேட்டீர். அரசரே! இதுதான் உட்பொருள்: என் தலைவரும் அரசருமான உமக்கு உன்னதரது தீர்ப்பின்படி நடக்கவிருப்பதும் இதுவே: மனித சமுதாயத்தினின்று நீர் விரட்டப்படுவீர்; காட்டு விலங்குகளோடு வாழ்ந்து, மாடுபோல புல்லை மேய்ந்து, வானத்தின் பனியில் நனைந்து கிடப்பீர். இவ்வாறு ஏழு ஆண்டுகள் உம்மைக் கடந்து செல்லும், மனிதர்களின் அரசை உன்னதமானவரே ஆள்கின்றார் என்றும், தாம் விரும்பியவர்க்கே அதனைத் தந்தருள்வார் என்றும் நீர் உணரும் வரை அந்நிலை நீடிக்கும். வேர்கள் நிறைந்த அடிமரத்தை விட்டுவைக்க வேண்டும் என்று கட்டளை பிறந்தது அல்லவா? அதன்படி, விண்ணகக் கடவுளே உலகை ஆள்கின்றார் என்பதை நீர் உணர்ந்தவுடன், அரசுரிமை மீண்டும் உனக்குக் கிடைக்கும்.

எனவே, அரசரே! என் அறிவுரை உம்மால் ஏற்றுக் கொள்ளத்தக்கது ஆக! நல்லறத்தைப் பேணித் தீச்செயல்களை நீக்குக! ஒடுக்கப்பட்டோர்க்கு இரக்கம் காட்டி உம் பாவக்கறைகளைப் போக்கிக்கொள்க! ஒருவேளை உமது வளமை நீடிப்பதற்கு இது வழியாகலாம்” என்றார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

22 ஜூலை 2025, 10:02