MAP

லேவியர்கள் லேவியர்கள்  

தடம் தந்த தகைமை – லேவியருக்குக் கொடுக்கப்பட்ட பணிகள்

தாவீதின் இறுதிச் சொற்களின்படி லேவியருள் இருபதும் அதற்கு மேற்பட்ட வயதினர் யாவரும் பதிவு செய்யப்பட்டனர்.

மெரினா ராஜ் – வத்திக்கான்

தங்கள் மூதாதையரின் குலங்களின்படியே, மூதாதையர் குடும்பத் தலைவர்களாய் இருந்த லேவியரின் புதல்வர் இவர்களே. இவர்கள் இருபதும் அதற்கு மேற்பட்ட வயதும் உடையவர்கள். தனித்தனியே நபர்களின் பெயர்களின் எண் வரிசைப்படியே பதிவு செய்யப்பட்டு ஆண்டவரின் திருக்கோவிலின் பணியோடு தொடர்புகொண்ட வேலைகளைச் செய்யவேண்டியவர்கள். ஏனெனில், “இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் தம் மக்களுக்கு அமைதி தந்து, எருசலேமில் என்றும் குடியிருக்கிறார். அதுவுமன்றி, லேவியர் திருக்கூடாரத்தையும் வழிபாட்டுக்கான அனைத்துக் கலங்களையும் இனிச் சுமக்க வேண்டுவதில்லை” என்று தாவீது கூறினார்.

தாவீதின் இறுதிச் சொற்களின்படி லேவியருள் இருபதும் அதற்கு மேற்பட்ட வயதினர் யாவரும் பதிவு செய்யப்பட்டனர். அவர்கள், ஆண்டவரின் இல்லப்பணியில் ஆரோனின் புதல்வரின்கீழ் வேலை செய்யவும், முற்றங்களையும் உள்ளறைகளையும் புனிதக் கலங்கள் அனைத்தையும் தூய்மைப்படுத்தவும், கோவிலில் எவ்வகைப் பணியையும் செய்யவும் வேண்டும்; திருமுன்னிலை அப்பங்கள், உணவுப்பலிக்கான மிருதுவான மாவு, புளிப்பற்ற அப்பம், சட்டிகளில் சுட்ட, பொரித்த அடைகள் ஆகியவற்றைத் தயாரித்து, அவற்றின் எடையையும் அளவையும் கணக்கிடுதல் வேண்டும். ஒவ்வொரு காலையிலும் மாலையிலும் ஆண்டவருக்கு நன்றி கூறவும் அவரைப் போற்றவும் வேண்டும்; அத்தோடு ஓய்வு நாள்களிலும் அமாவாசை நாள்களிலும் மற்றைய விழாக்களிலும் ஆண்டவருக்கு எரிபலி செலுத்தும்போது எண்ணிக்கைப்படியும் பிரிவுகளின்படியும் ஆண்டவர் முன் எப்போதும் நிற்கவேண்டும். ஆண்டவர் தங்கும் சந்திப்புக் கூடாரத்தையும், திருத்தலத்தையும் கண்காணிக்கவும், ஆரோனின் வழிமரபில் வந்த அவர்கள் சகோதரரான குருக்களுக்கு ஆண்டவரின் இல்லப் பணியில் உதவி செய்யவும் வேண்டும்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

12 ஜூலை 2025, 13:50