தடம் தந்த தகைமை – சாலமோனுக்கு வலிமை அளித்த அரசர் தாவீது
மெரினா ராஜ் - வத்திக்கான்
ஒவ்வொரு திருப்பணிக்கும் தேவையான பொன், வெள்ளிக் கலங்களைச் செய்வதற்கான பொன், வெள்ளியின் செக்கேல் நிறையையும், பொன் விளக்குத் தண்டுகளுக்கும் அவற்றின் பொன் அகல்களுக்கும் தேவையான பொன்னின் நிறையையும், வெள்ளி விளக்குத் தண்டுகளுக்கும் அவற்றின் அகல்களுக்கும் தேவையான வெள்ளியின் நிறையையும், திருமுன்னிலை அப்ப மேசை ஒவ்வொன்றிற்குமான பொன் நிறையையும், வெள்ளி மேசைக்கான வெள்ளி நிறையையும், அள்ளுக்கருவிகளுக்கும், கலங்களுக்கும், கிண்ணங்களுக்குமான பசும்பொன்னின் நிறையையும் பொற்கலங்களில் ஒவ்வொரு கலத்திற்கும் தேவையான நிறையையும் வெள்ளிக் கலங்களின் ஒவ்வொரு கிண்ணத்திற்கும் தேவையான நிறையையும் கொடுத்தார் அரசர் தாவீது. தூபபீடத்திற்கான புடமிடப்பட்ட பொன்னின் நிறையையும் கொடுத்தார். இறக்கைகளை விரித்து ஆண்டவரின் உடன்படிக்கைப் பேழையை மூடும் பொற்கெருபுகளைக் கொண்ட பொன் தேரின் மாதிரி வடிவத்தையும் கொடுத்தார். தாவீது, “இந்த மாதிரிகள் அனைத்தையும் ஆண்டவரே தம் கையால் வரைந்தளித்து அவை அனைத்தையும் செய்யும்படி எனக்கு உணர்த்தினார்” என்றார்.
தாவீது தம் மகன் சாலமோனை நோக்கி, “நீ மன வலிமை கொள்! திடம் கொள்! உறுதியாயிரு! அஞ்சாதே! கலங்காதே! செயல்படு! கடவுளாகிய ஆண்டவர், என் கடவுள் உன்னோடும் இருக்கிறார். ஆண்டவரின் இல்லப்பணி அனைத்தும் நிறைவு பெறும்வரை அவர் உன்னைவிட்டு விலகார்; உன்னைக் கைவிடார். இதோ, கடவுளது கோவிலின் அனைத்துத் திருப்பணிக்கெனவும், குருத்துவ, லேவியப் பிரிவுகள் தயாராய் உள்ளன; எல்லா வகைப் பணியிலும் உனக்கு உதவி செய்ய, எந்த ஒரு பணியையும் செய்வதற்குத் திறமை வாய்ந்தோரும் ஆர்வமிக்கோரும் உன்னோடு இருக்கின்றனர். மேலும், தலைவர்களும் மக்கள் யாவரும் உன் கட்டளைகள் அனைத்திற்காகவும் காத்திருக்கின்றனர் என்றார்.”
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்