தடம் தந்த தகைமை – உங்களை எனக்குத் தெரியும்
அருள்பணி பெனடிக்ட் M.D. ஆனலின்
மனிதர் தரும் பெருமை எனக்குத் தேவையில்லை. உங்களை எனக்குத் தெரியும். உங்களிடம் இறையன்பு இல்லை, (யோவா 5:41,42) என்றார் இயேசு.
பெருமை தேடா மாமனிதர் இயேசு. அந்த மகத்தான மனவுணர்வு அவருக்குள் இருந்ததால்தான் ‘நல்ல போதகர்’ என்றழைத்து நிலைவாழ்விற்கான வழி கேட்டத் தலைவரிடம் “நான் நல்லவன் என ஏன் சொல்கிறீர்?” (லூக் 18:19) எனக் கேள்வி தொடுத்தார். தன் பலவீனங்களைச் சரியாகப் புரியாதவரே தன்னைப் பற்றிப் பெருமை பிதற்றுவர், தன்னைப் பிறர் பெருமைப்படுத்த வேண்டுமென விரும்புவர். அது பெருமைக்குச் சிறுமை சேர்ப்பது. தங்களுக்குச் சாதகமாகப் பேசுவோரையும், செயல்படுவோரையும் பெருமைப்படுத்த இவ்வுலகம் தயங்காது. அதேவேளையில், அவல அநியாயங்களையும், அடக்குமுறைகளையும் சுட்டிக்காட்டுகையில் தவறை உணரவோ திருத்தவோ முயலாமல் முறைத்து நிற்கும் சூழலும் இங்கு சூழ்ந்துள்ளது. இறையன்பு மிக்கவர்கள் இதய அன்புகொண்டு துலங்குவர். ஒருவரது இறையன்புக் குறைபாடே பிறரன்பிற்கான வறட்சி. அதுவே எதையும் எவரையும் குறைத்துப் பேசும். பணிவிடையே நம் பெருமை.
இறைவா! நீரே என் பெருமை, நீரே என் வலிமை. உமக்காகச் சிறுமையடைவதும் பெருமை என ஏற்கும் மனம் தாரும்.
(‘உம் வாக்கின் வழியிலே...’ என்னும் புத்தகத்திலிருந்து)
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்