தடம் தந்த தகைமை - இடுக்கமான வாயிலின் வழியே
அருள்பணி பெனடிக்ட் M.D. ஆனலின்
இடுக்கமான வாயிலின் வழியே நுழையுங்கள். ஏனெனில் அழிவுக்குச் செல்லும் வாயில்
அகன்றது. வழியும் விரிவானது. அதன் வழியே செல்வோர் பலர். வாழ்வுக்குச் செல்லும்
வாயில் மிகவும் இடுக்கமானது. வழியும் மிகக் குறுகலானது. இதைக் கண்டுபிடிப்போர்
சிலரே, (மத் 7:13&14) என உரைத்தார் இயேசு.
நம் வாழ்வுப் பயணமதைத் தொடர ஏராளமான வழிகள் நம்முன்னே உள்ளன. எந்த வழியைத் தேர்கிறோம் என்பதிலேதான் அடங்கியுள்ளது நம் வெற்றி – தோல்வி.
இலக்கு தெளிவானவர்கள் இடுக்கமான வாயிலா, இம்மியளவு பாதையா என யோசித்துத் தயங்கி நிற்பதில்லை. மலையாயினும் மலைத்திடாமல் கடந்திடுவார். இங்கே இடுக்கமான வாயில் என இயேசுவால் மொழியப்படுவது வெறுமனே நுழைவு வாயில் அன்று. தியாகம், திட்டமிடல், பொறுமை, பொறுப்பு, மன்னிப்பு, சகிப்புத்தன்மை, கட்டுப்பாடு, நேர மேலாண்மை எனும் மதிப்பீடுகளின் ஊடாகப் பயணிப்பதே. எங்கே ஒருவர் தன்னை
வருத்தி பொதுநலப் பணியில் இணைகின்றாரோ அவர் வாழ்வின் பாதையில் பயணிக்கின்றார் என்பதே இயேசுவின் புரிதல். நம்மை ஒடுக்குவதால் பிறர் பெறும் வாழ்வே நம் நிலைவாழ்வின் தொடக்கம்.
இறைவா! அழிவின் பாதை எது? ஆக்கத்தின் பாதை எது? எனத் தேர்ந்து தெளியும் ஞானம் தாரும்.
(‘உம் வாக்கின் வழியிலே...’ என்னும் புத்தகத்திலிருந்து
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்