MAP

வங்காளதேச கிறிஸ்தவர்கள் வங்காளதேச கிறிஸ்தவர்கள்   (AFP or licensors)

வங்கதேசத்தில் மதச் சிறுபான்மையினருக்கு எதிராகக் குற்றங்கள் அதிகரிப்பு!

அமைதிக்கான நோபல் பரிசு வென்ற முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு, 17 கோடி மக்கள் தொகைக் கொண்ட முஸ்லிம் பெரும்பான்மை நாட்டில், பொறுப்பேற்ற பிறகும் தாக்குதல்கள் தொடர்வதாக அந்நாட்டு சிறுபான்மையினர் அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.

சுஜிதா சுடர்விழி -வத்திக்கான்

ஜூலை 10, இவ்வியாழனன்று, வங்கதேசத்தில் உள்ள சிறுபான்வையினர் குழு, நாட்டில் சிறுபான்மையினருக்கு எதிராக இடம்பெற்ற 2,000-க்கும் மேற்பட்ட குற்றங்களை அரசு கண்டும் காணாமல் விட்டுவிட்டதாக குற்றம் சாட்டியதாக தெரிவித்துள்ளது யூக்கான் செய்தி நிறுவனம்.

இதுகுறித்துக் கருத்துத் தெரிவித்துள்ள இவ்வமைப்பின் பொதுச் செயலாளர் மொனிந்திர குமார் நாத் அவர்கள், “கடந்த ஆண்டு ஆகஸ்ட் 4 முதல் இந்த ஆண்டு ஜூன் 30 வரை கொலைகள், பாலியல் வன்மம் மற்றும் கூட்டு பாலியல் வன்கொடுமைகள், கோயில்கள், வீடுகள் மற்றும் வணிகங்களை நாசப்படுத்துதல் உள்ளிட்ட 2,442 சம்பவங்களை நாங்கள் பதிவு செய்துள்ளோம்” என்று அச்செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளார்.  

மேலும் கடந்த ஆண்டு அந்நாட்டின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா அவர்களின் ஆட்சி வீழ்ந்த பிறகு, மதச் சிறுபான்மையினர் மீது குறி வைக்கப்பட்ட தாக்குதல்கள் குறித்து இந்து-புத்த-கிறிஸ்தவ ஒன்றிப்பு அமைப்பு கவலை தெரிவித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது அச்செய்தி நிறுவனம்.

அதேவேளையில், அமைதிக்கான நோபல் பரிசு வென்ற முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு, 17 கோடி  மக்கள்  தொகைக் கொண்ட முஸ்லிம் பெரும்பான்மை  நாட்டில்,  பொறுப்பேற்ற பிறகும் இதுபோன்ற தாக்குதல்கள் தொடர்வதாக அவ்வமைப்பு குற்றம் சாட்டியதாக உரைத்துள்ளது அச்செய்தி நிறுவனம்.

“வங்க தேசத்தின் மொத்த மக்கள் தொகையில் குறைந்தது 10 விழுக்காட்டினர் சிறுபான்மை குழுக்களைச் சேர்ந்தவர்கள் என்றாலும், அரசு மதச் சிறுபான்மையினருக்காக ஒரு தனி ஆணையத்தை இதுவரை அமைக்கவில்லை” என்று இவ்வமைப்பின் உறுப்பினர் காஜல் தேப்நாத் அவர்கள் தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது அச்செய்தி நிறுவனம்.

மேலும் 1971-ஆம் ஆண்டில் நாடு சுதந்திரம் பெற்றதிலிருந்து சிறுபான்மையினர் அதிக மன அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளனர் என்றும், சிறுபான்மையினருக்கு எதிராக 88 வன்முறை சம்பவங்கள் நடந்தேறியுள்ளது என்றும் எடுத்துக்காட்டியுள்ளது அச்செய்திக் குறிப்பு.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

11 ஜூலை 2025, 14:33