MAP

கல்வி கற்கும் இலங்கை சிறார் கல்வி கற்கும் இலங்கை சிறார்  (ANSA)

கல்வி மற்றும் வறுமை ஒழிப்பிற்கு அதிக நிதி ஒதுக்கும் இலங்கை அரசு

இலங்கையில் சுற்றுலா தளம் ஒரு வலுவான வளர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது இது முழு நாட்டிற்கும், நன்மை பயக்கும் விதமாக அமைகிறது – அருள்தந்தை பாசல் பெர்னாண்டோ.

சுஜிதா சுடர்விழி - வத்திக்கான்

இலங்கையின் இன்றைய அரசு, கல்வி மற்றும் வறுமைக் குறைப்பு போன்ற பகுதிகளுக்கு அரசின் நிதிகளில் அதிக பங்கை ஒதுக்கியுள்ளது, ஏழைகள் அரசால் அதிக கவனத்தைப் பெறுகிறார்கள் எனவும் தெரிவித்துள்ளார் அருள்தந்தை பாசல் பெர்னாண்டோ.

யூபிலி ஆண்டை முன்னிட்டு அண்மையில் ஃபீதேஸ் என்னும் கத்தோலிக்க செய்தி நிறுவனத்திற்கு அளித்த நேர்காணலில் இவ்வாறு எடுத்துரைத்துள்ளார் இலங்கையில் உள்ள திருஅவையின் மறைப்பரப்பு சங்கங்களின் தேசிய இயக்குநர் அருள்தந்தை பாசல் பெர்னாண்டோ.

இலங்கைத்தீவின் இயற்கை அழகை மக்களுக்கு வெளிப்படுத்துவதால் நாட்டின் பொருளாதாரம் வளர்கின்றது என்றும், 2025-ஆம் ஆண்டு அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருவார்கள் என்று எதிர்பார்ப்பதாகவும் கூறினார் அருள்பணி பாசல் பெர்ணாண்டோ.

இந்த சமூக மற்றும் பொருளாதார முன்னேற்றங்கள் அனைத்தும் ஒரு நேர்மறையான சூழலை உருவாக்குகின்றன என்றும், மேலும் இது மக்களுக்கு உண்மையான நம்பிக்கையை அளிக்கின்றன என்றும் அச்செய்தி நிறுவனத்திற்கு கூறியுள்ளார் அருள்தந்தை பாசல்.

2000-ஆம் ஆண்டின் யூபிலியை நினைவு கூர்ந்த அருள்தந்தை பாசல் அவர்கள், புதிய ஆயிரமாம் ஆண்டின் (மில்லேனியத்தின்) தொடக்கத்தில் அனைத்து படைப்புகளுக்கும் நற்செய்தியை அறிவிக்க நாம் செய்த உறுதிப்பாட்டை புதுப்பிக்க வேண்டும் எனவும் யூபிலி நம் ஒவ்வொரு நபரின் இதயத்தில் ஏற்படுத்தும் மாற்றத்துடன் தொடங்குகிறது எனவும் ஃபீதேஸ் செய்தி நிறுவனத்திற்கு கூறியுள்ளார்.

இலங்கையில்  உள்ள  சுற்றுலா மேம்பாட்டு ஆணையத்தின் அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களின்படி, 2025 ஆம் ஆண்டில் இலங்கை அதிக எண்ணிக்கையிலான பார்வையாளர்களை வரவேற்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும், சனவரியில் மட்டும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 2,50,000 ஆக இருந்ததாகவும் கூறியுள்ளார் அருள்தந்தை பாசல்.

இந்த எண்ணிக்கையானது முந்தைய ஆண்டை விட 20 விழுக்காடு அதிகரித்துள்ளது என தெரிவுபடுத்தியுள்ள அருள்தந்தை பாசல் அவர்கள், கடந்த இலையுதிர்காலத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய அரசுத்தலைவர் அனுர குமார திசாநாயக்காவுக்கு மக்கள் ஆதரவு அளித்துள்ளனர் எனவும் கடுமையான நெருக்கடிக்கு  ஊழலே  காரணம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இருப்பினும், தேசிய இயக்குநரின் கூற்றுப்படி, நம்பிக்கை, ஒவ்வொரு நபரின்   ஆன்மிகத்தையும் அவர்களுக்குள்ளிருந்தே வடிவமைக்கிறது என்பதை எதிர்நோக்கின் யூபிலி விழாவைக் கொண்டாடுகின்ற ஒவ்வொரு கத்தோலிக்க சமூகத்திலும் காணமுடியும்  என்றும் அருள்தந்தை பாசல் கூறியுள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

07 ஜூன் 2025, 13:46