சூடானில் குண்டுவீச்சால் தகர்க்கப்பட்ட 3 கோவில்கள்!
ஜெர்சிலின் டிக்ரோஸ் – வத்திக்கான்
சூடான் நாட்டின் வட டார்ஃபர் மாநிலத்தின் தலைநகர் எல் ஃபாஷரில் உள்ள பிற திருச்சபையைச் சேர்ந்த இருகோவில்களும், கத்தோலிக்கத் திருஅவையைச் சேர்ந்த ஒரு கோவிலும் அந்நாட்டின் RSF எனப்படும் தேசிய இராணுவப் படையினரின் குண்டு வீச்சிற்கு உள்ளாக்கப்பட்டு தாக்கப்பட்டதாக ICN செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தத் தாக்குதலில் 5 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும், பலர் காயமடைந்துள்ளனர் என்றும், அவ்வாறு காயமடைந்தவர்களில் எல் ஃபாஷரின் பங்குத்தந்தை அருள்பணியாளர் லூக்கா அவர்கள், ஜூன் 12, வியாழனன்று உயிரிழந்ததாகவும் அச்செய்தி நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.
கடந்த 2023-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் சூடானின் ஆயுதப்படைகளான SAFவுடன், RSF மோதல் தொடங்கியதிலிருந்து, கிறிஸ்தவக் கோவில்கள் தொடர்ந்து தாக்கப்பட்ட வருகிறது என்றும், கிறிஸ்தவர்களை இஸ்லாம் மதத்திற்கு மாற்ற RSF அமைப்பு கட்டாய முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது என்றும், தெரிவித்துள்ளது அச்செய்தி நிறுவனம்.
மேலும் கடந்த 2024-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கர்த்தூமில் இடம்பெற்ற வான்வழித் தாக்குதலில் 8 குழந்தைகள் உள்பட 11 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் கூறியுள்ளது அச்செய்திக் குறிப்பு.
இந்நிலையில், மோதலில் ஈடுபட்டிருக்கும் இரு தரப்பினரும் கடுமையான மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டுள்ளனர் என்றும், பலவேளைகளில் புலம்பெயர்ந்த மக்கள் தஞ்சமடையும் இடங்களாக விளங்கும் வழிபாட்டுத் தலங்களைத் தாக்குவது கொடுமையான செயல் என்றும் சூடான் நாட்டின் உலகளாவியக் கிறிஸ்தவ ஒன்றிப்பு இயக்கத்தின் நிறுவுனரும் தலைவருமான Mervyn Thomas அவர்கள் கூறியுள்ளதையும் சுட்டிக்காட்டியுள்ளது அச்செய்தி.
மேலும் மோதலில் ஈடுபட்டுள்ள இந்த இரு தரப்பினரும் உடனடியாகப் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொள்ள வேண்டும் என்றும், தங்கள் நாட்டு மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் Thomas அவர்கள் வலியுறுத்தியதையும் அச்செய்திக்
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்