பிரிவினை அரசியலுக்கு எதிராக துறவறத்தார் மற்றும் புலம்பெயர்ந்தோர்!
சுஜிதா சுடர்விழி - வத்திக்கான்
இங்கிலாந்து நாட்டு பிரதமர் கீர் ஸ்டார்மர் அவர்களின் குடியேற்ற வெள்ளை அறிக்கை, மக்கள் குடியேறுவதை கடினமாக்கும் கொடுமையான நடவடிக்கைகள் மற்றும் அம்மக்கள் தங்கள் திறமைகளை இந்த நாட்டிற்குக் கொண்டு வந்து பல முக்கிய வேலைகளைச் செய்வதைத் தடுக்கும் விதமாகவும் இருகிறது என்றும் Asylum Matters எனப்படும் தன்னார்வத் தொண்டு நிறுவனம் கூறியுள்ளதாகத் தெரிவித்துள்ளது ICN எனப்படும் செய்தி நிறுவனம்
துறவற சபைகள், இடம்பெயர்ந்தோர் மற்றும் புலம்பெயர்ந்தோர் குழுக்கள் உட்பட 350க்கும் மேற்பட்ட அமைப்புகள் "பிரிவினை அரசியலை" எதிர்த்துப் போராட ஒன்றிணைந்து செயல்படுவதற்கான உறுதிமொழியில் கையெழுத்திட்டுள்ளன எனவும் உரைக்கிறது அச்செய்தி நிறுவனம்.
மேலும் இந்த அறிக்கையில் Asylum Matters எனப்படும் தன்னார்வத் தொண்டு நிறுவனத்தினருன் இணைந்து கையொப்பமிட்டவர்களில் இயேசு சபை மற்றும் கொலம்பன் மறைபரப்பு சபைப் பணியாளர்களும் அடங்குவர் என்றும் அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது
இடம்பெயர்ந்தவர்களின் அர்த்தமுள்ள மற்றும் நீடித்த பங்களிப்புகளை கொண்டாடுவதன் மூலம், அமைதி, மாண்பு மற்றும் நம்பிக்கைக்கான அவர்களின் அடிப்படை மற்றும் இயல்பான உரிமையை இந்தக் குழுக்கள் முன்னிலைப்படுத்துவதால் இடம்பெயர்ந்தோரின் எதிர்ப்புணர்விற்கு மதிப்பளித்து அவர்களுடன் ஒன்றிணைந்து செயல்பட உறுதியளிக்கின்றன என்றும் அச்செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
இவ்வறிக்கையில் இடம்பெயர்ந்தோர், புலம்பெயர்ந்தோர், புகலிடம் தேடும் மக்கள், இனரீதியாக பாதிக்கப்பட்டோர், மாற்றுத்திறனாளிகள், LGBTQIA மக்கள், வறுமையில் வாடுவோர் மற்றும் வாழ்க்கையைச் சந்திக்கவும் உயிர் வாழவும் போராடுவோர், வீடற்றோர் கவனிப்பு மற்றும் தேவையில் உள்ளோர் மற்றும் பலர் உள்ளதையும் அச்செய்தி குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்