திருஅவையில் யூபிலி ஆண்டு 2025 – ஆணை மடல் பகுதி 29
மெரினா ராஜ் - வத்திக்கான்
இயேசுவின் எதிர்நோக்கால் ஈர்க்கப்பட்ட நாம், அந்த எதிநோக்கை விரும்புவோருக்கு அதனை அளிக்கக்கூடியவர்களாக வாழ்வோம். எதிர்நோக்கானது நம் வழியாக அவர்களுக்குப் பரவவும், அதனால் அவர்களும் எதிர்நோக்குக் கொண்டவர்களாக வாழவும் அனுமதிப்போம். “நெஞ்சே! ஆண்டவருக்காகக் காத்திரு; மன உறுதிகொள்; உன் உள்ளம் வலிமை பெறட்டும்; ஆண்டவருக்காகக் காத்திரு” (தி.பா:27:14) என்ற திருப்பாடல் ஆசிரியரின் வார்த்தைகளை எடுத்துரைக்கக்கூடியதாக நமது வாழ்க்கை அமையட்டும். இன்றும் என்றும் எக்காலமும் மாட்சியும் புகழும் வந்துசேரும், ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் வருகைக்காக நாம் நம்பிக்கையுடனும் எதிர்நோக்குடனும் நாம் காத்திருக்கும்போது, நமது நம்பிக்கையின் பலமானது நம்முடைய நிகழ்காலத்தை நிரப்படுகின்றது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்