திருஅவையில் யூபிலி ஆண்டு 2025 - ஆணை மடல் பகுதி 28
மெரினா ராஜ் – வத்திக்கான்
நாம் கொண்டாடுகின்ற இந்த எதிர்நோக்கின் திருப்பயணிகள் என்ற 2025-ஆம் ஆண்டு. யூபிலியானது எதிர்நோக்கும் ஒருபோதும் மறையாது என்ற நம்பிக்கையால் அடையாளப்படுத்தப்படும் கடவுளின் புனித ஆண்டாக இருக்கும். நமது வாழ்க்கைக்குத் தேவையான நம்பிக்கையை திருஅவை மற்றும் சமூகத்தில் மீண்டும் கண்டறியவும், தனிப்பட்ட மற்றும் பன்னாட்டு உறவுகளில் ஒவ்வொரு, நபரின் மாண்பை மேம்படுத்துவதிலும் படைப்பின் மீதான மரியாதையிலும் நம்பிக்கையைக் கண்டறிய இந்த யூபிலி ஆண்டு நமக்கு உதவட்டும்.
“அவர் வாக்களித்தபடியே நீதி குடிகொண்டிருக்கும் புதிய விண்ணுலகும் புதிய மண்ணுலகும் வரும் என நாம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்” (2பேதுரு: 3:13) என்ற இறைவார்த்தைக்கேற்ப நமது சான்றுள்ள நம்பிக்கையானது இவ்வுலகில் உண்மையான எதிர்நோக்கின் புளிக்காரமாக புதிய வானம் மற்றும் புதிய பூமியின் அறிவிப்பாக இருக்கட்டும். அத்தகைய புதிய பூமியில் நீதி மற்றும் ஒற்றுமையுடன் மக்களுடன் வாழவும், கடவுளின் வாக்குறுதியை நிறைவேற்றவும் நாம் பாடுபடுகின்றோம்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்